WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Friday, September 19, 2014

கல்வி துறைக்கு தேர்வான தட்டச்சர்கள் நாளை நியமனம்

பள்ளி கல்வித் துறைக்கு தேர்வான 213 தட்டச்சர்கள், நாளை, 'ஆன் - லைன்'
வழியில் நடக்கும் கலந்தாய்வில், பணி நியமனம் செய்யப்படுகின்றனர்.பள்ளி கல்வி இயக்குனர் ராமேஸ்வர முருகன் அறிவிப்பு:டி.என்.பி.எஸ்.சி., மூலம் 213 தட்டச்சர்கள், பள்ளி கல்வித் துறைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளனர்.இவர்களை பணி நியமனம் செய்வதற்கான, 'ஆன் - லைன்' கலந்தாய்வு, 20ம் தேதி (நாளை), மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்களில் நடக்கிறது.வேலைக்கு தேர்வு பெற்றவர்கள், தங்கள் முகவரி சார்ந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்திற்குச் சென்று, கலந்தாய்வில் கலந்து கொள்ள வேண்டும்.கலந்தாய்வுக்கு, ஒரு மணி நேரம், முன்னதாக வர வேண்டும். டி.என்.பி.எஸ்.சி., வழங்கிய துறை ஒதுக்கீட்டு உத்தரவு கடிதம், கல்விச் சான்றிதழ்கள், ஜாதிச் சான்றிதழ் மற்றும் இதர சான்றிதழ்களை, தவறாமல் கொண்டு வர வேண்டும்.இவ்வாறு, இயக்குனர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.