WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Saturday, September 13, 2014

டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வுகளின் தெரிவுப் பட்டியல் வெளியீடு

டிஎன் பிஎஸ்சி நடத்திய சார்நிலைப் பணிகளுக்கான தேர்வில் தேர்ச்சி
பெற்றவர்களின் தெரிவு பட்டியல்  இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

டிஎன்பிஎஸ்சி தொகுதி 6ல் அடங்கிய 80 வனச்சர கர் காலிப் பணியிடங்களுக்கு கடந்த 2011 பிப்ரவரி மாதம் 21ம் தேதி முதல் மார்ச் 6ம் தேதி வரை நடந்த போட்டி எழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு 2012 ஆகஸ்ட் மாதம் 22ம்மற்றும் 23ம் தேதிகளில் நேர்காணல் நடந்தது. மேற்கண்ட இரண்டு தேர்வுகளிலும் பெற்ற மொத்த மதிப்பெண்கள், இட ஒதுக்கீடு விதி மற்றும் அந்த பதவிகளுக்கான அறிவிக்கையில் வெளியிடப்பட்ட பிற விதிகளின் அடிப்படையில் அந்த பதவிக்கு தெரிவு செய்யப்பட்டவர்களின் பட்டியல் டிஎன்பிஎஸ்சி இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. 

அதேபோல, மீன்வளச் சார்நிலைப் பணியில் அடங்கிய 24 மீன் வள சார் ஆய்வாளர்  பணியிடங்களுக்கு கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 10ம் தேதி போட்டி எழுத்து தேர்வு நடந்தது. அதைத் தொடர்ந்து கடந்த 4ம் தேதி நேர்காணல் நடந்தது. மேலும், பொது சார்நிலைப் பணியில் அடங்கிய 25 பஞ்ச் ஆபரேட்டர் காலிப்பணியிடங்களுக்கு கடந்த ஆண்டு பிப்ரவரி 10ம் தேதி போட்டி எழுத்து தேர்வு நடந்தது. கடந்த ஆகஸ்ட் மாதம் 20ம் தேதி நேர்காணல் நடந்தது. இந்த தேர்வுகளில் தகுதியுடையோர் பட்டியல் இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.