தமிழக அரசு மேனிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள கணினி ஆசிரியர்கள்
பணியிடங்களை நிரப்ப அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி 827 பேர் நியமிக்கப்பட உள்ளனர். அரசு மேனிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள கணினி பயிற்றுநர்கள் பணியிடங்கள் ஏற்கனவே 625 இருந்தன. அத்துடன் கூடுதலாக 175 சேர்த்து 827 நியமிக்க கோரிக்கை வைக்கப்பட்டது. பின்னர் இது தொடர்பாக உச்சநீதி மன்றம் பிறப்பித்த உத்தரவின் பேரில் தற்போது தமிழக அரசு ஆணைவெளியிட்டுள்ளது(அரசாணை எண் 130. தேதி 5.9.14) இந்த உத்தரவின் படி கணினி பயிற்றுநர் பணியிடங்கள் வேலை வாய்ப்பு பதிவு அலுவலகங்களில் பதிவு செய்துள்ளவர்களின் பட்டியல் பெறப்பட்டு நியமிக்கப்படும்.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.