WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Monday, September 22, 2014

ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்க மாணவர்களிடம் வசூல்?

வாலாஜாபாத் : பெற்றோர் - ஆசிரியர்
கழகம் மூலம் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்க, மாணவ, மாணவியரிடம் பணம் வசூலிப்பது, பெற்றோர் இடையே, அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. காஞ்சிபுரம் அடுத்த, புள்ளலுார் அரசு மேல்நிலைப் பள்ளியில், 375 மாணவியர்; 342 மாணவர்கள் என, 717 பேர் பயின்று வருகின்றனர். ஆறாம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரையில், பயின்று வரும் மாணவ, மாணவியரிடம், 200 ரூபாயும்; பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 பயின்று வரும் மாணவ, மாணவியரிடம், 300 ரூபாயும் பள்ளி நிர்வாகம் வசூலித்து வருகிறது. அரசு பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவியரிடம் பணம் வசூலிப்பது, பெற்றோரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து, பள்ளித் தலைமை ஆசிரியர் பாஸ்கர் கூறும்போது, ""10ம் வகுப்பு மாணவ, மாணவியர்களுக்கு பாடம் கற்று தரும் பெற்றோர் - ஆசிரியர் கழக ஆசிரியர்களுக்கு, சம்பளம் வழங்க பணத்தை வசூலிக்கிறோம்,'' என்றார்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.