WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Friday, September 19, 2014

தீர்ப்பு ஒத்திவைப்பு வெயிட்டேஜ் மார்க் எதிர்த்து ஆசிரியர்கள் ஐகோர்ட்டில் வழக்கு

 வெயிட்டேஜ் மார்க் எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் தாக்கல்  செய்த வழக்கில்
தீர்ப்பு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில்  ஆசிரியர்களை தேர்வு செய்வதில், ஆசிரியர் தேர்வு வாரியம்  ‘வெயிட்டேஜ்’ முறையை  பின்பற்றுகிறது. இந்த வெயிட்டேஜ்  முறையின்படி, ஆசிரியர் பணிக்கு தகுதி தேர்வு எழுதி தேர்ச்சி  பெற்றவர்களின் மதிப்பெண், அவர்கள் கல்லூரி மற்றும் பிளஸ் 2 ஆகிய  படிப்புகளின் பெற்ற  மதிப்பெண்ணை கணக்கிட்டு, ஆசிரியர்கள் தேர்வு  செய்யப்படுகின்றனர். வெயிட்டேஜ் முறையை ரத்து செய்யக்கோரி  சென்னை உயர்நீதிமன்றத்தில் பட்டதாரி ஆசிரியர்கள் பலர் வழக்கு  தொடர்ந்தனர். இந்த வழக்கு நீதிபதிகள் அக்னிகோத்ரி, எம்.எம்.சுந்தரேஷ்  ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அரசு சார்பில் அட்வகேட்  ஜெனரல் சோமையாஜி ஆஜராகி ஆசிரியர் பணிக்கு கல்வி, திறமை  மற்றும் அறிவியல் ரீதியான தேர்வுக்கு முக்கியத்துவம் கொடுத்து  தேர்வுகள் நடத்தப்படுகிறது. இந்த முறையை தேசிய ஆசிரியர் கல்வி  கவுன்சில் விதிகளின் அடிப்படையில் பின்பற்றப்படுகிறது. இந்த  முறையை பின்பற்றுவதில் எந்த விதிமுறைகளும் மீறப்படவில்லை’  என்று வாதாடினார்.

மனுதாரர் சார்பில் வக்கீல்கள் சங்கரன், ஆனந்தி உள்பட பலர் ஆஜராகி,  கடந்த 2000ம் ஆண்டுக்கு முன்புள்ள தேர்வு முறைக்கும்,  அதன்பின்புள்ள தேர்வு முறைக்கும் பெரும் வித்தியாசம் உள்ளது.  கல்லூரி செமஸ்டர் தேர்வுகளிலும் மதிப்பெண் வழங்குவதில் பெரும்  வித்தியாசம் உள்ளது. பழைய முறையில் மனுதாரர்கள் படித்தனர்.  குறைவான மார்க் பிளஸ் 2 தேர்வில் கிடைத்தது. தற்போது முறையில்  படிப்பவர்கள் அதிகமான மார்க் பெற்று விடுகிறார்கள். எனவே அவர்கள்  அதிகமான வெயிடேஜ் மார்க் பெற்றுவிடுகிறார்கள். எனவே,  வெயிட்டேஜ் முறையை ரத்து செய்யவேண்டும் என்று  வாதாடினார்கள்.  இரு தரப்பு வாதத்தையும் கேட்ட நீதிபதிகள் வழக்கின் தீர்ப்பை தேதி  குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.


2 comments:

  1. இவர்கள் எல்லாம் ஆசிரியர்கள் இல்லை . இன்னும் அதற்கான தகுதியை பெறவில்லை. அதாவது இன்னும் ஆசிரியர் பணிக்கு தேர்வாகவே இல்லை . இவர்களை போய் ஆசிரியகள் என்று போடாதீர்கள்.

    ReplyDelete
  2. Replies

    Vijaya Kumar ChennaiSeptember 20, 2014 at 7:34 AM
    DEAR TET FRIENDS,

    MONDAY A HISTORICAL EVENT FOR TET

    A IMPORTANT JUDGMENT

    ALL THE VERY BEST MY DEAR FRIENDS.

    ReplyDelete

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.