WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Saturday, September 6, 2014

வேதியியல் பட்டதாரிகளுக்கு தேசிய வேதியியல் ஆய்வகத்தில் பணி!


பூனாவில் உள்ள National Chemical Laboratory-ல் நடைபெறவுள்ள திட்டத்தில் தற்காலிகமாக Project Fellow-Assistant ஆக பணியாற்ற தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விளம்பர எண்: SSP02/TR/2014

Project Code: SSP294726

திட்டத்தின் பெயர்: Evaluation of Catalyst Performance in Fixed bed reactor (FBR) System

பணி: புராஜெக்ட் பெல்லோ/அசிஸ்டென்ட்

வயதுவரம்பு: 28க்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.16,000

தகுதி: வேதியியல் பிரிவில் 55 சதவிகித மதிப்பெண்களுடன் எம்.எஸ்சி முடித்திருக்க வேண்டும். மேலும் CSIR-NET/NET-LS தகுதி பெற்றிருப்பது விரும்பத்தக்கது.

சம்மந்தப்பட்ட பணியில் அனுபவம் பெற்றிருப்பது விரும்பத்தக்கதாகும்.

தேர்வு செய்யப்படும் முறை: 

நேர்முகத் தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: 18.09.2014

நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம்: Catalysis Division, Meeting Room No:158, Ground Floor, NCL Main Building.

நேர்முகத் தேர்வு நடைபெறும் நேரம்: காலை 11.30 மணிக்கு நடைபெறும். தனிப்பட்ட அழைப்புகள் எதுவும் அனுப்பப்பட மாட்டாது.

தகுதியானவர்களின் பட்டியல் 16.09.2014 அன்று வெளியிடப்படும்.

தகவல்கள் அறிந்துகொள்ள திரு. பி.கே. புருஷோத்தமன் அவர்களை 25902010 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

விண்ணப்பதாரர்கள் தங்களைப் பற்றிய முழு விவரங்களையும் ஏ4 வெள்ளைத்தாளில் தயார் செய்து கல்வித்தகுதி, வயது மற்றும் சாதி சான்றிதழ்களின் நகல்கள் இணைத்து அனுப்ப வேண்டும். நேர்முகத் தேர்விற்கு வரும்போது அனைத்து அசல் சான்றிதழ்களையும் கொண்டு வரவேண்டும்.

விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 15.09.2014

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: Dr. T.Raja, Catalysis Division, National Chemical Laboratory, Dr.Homibhaba Road, Pune-411008.

1 comment:

  1. இடைநிலை ஆசிரியர்கள் கூடுதல் பணியிடங்கள் வேண்டி சென்னையில் முகாமிட்ட முதல் நாள்(31.8.14) தொடங்கி இன்று வரை....

    முதல் நாள்:
    சுமார் 20 பேர் ஒன்றுகூடி கலந்தாலோசித்து கோரிக்கை மனு தயார் செய்தோம் .பின்பு எங்களுடைய கோரிக்கையை வெளிப்படுத்த அனைத்து மீடியா உதவியையும் நாடினோம் .

    கோரிக்கை மனுவின் சுருக்கம் , ...
    1.2013-14 vacancy
    2.English medium vaccancy (4000)
    3.Sgt to BT promotion vaccancy
    4.Govt sgt who r passed and selected as BT in 2013 tet.

    இரண்டாம் நாள்:
    32 பேர் ஒன்றுகூடி தலைமை செயலகம் சென்று மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் தனிப்பிரிவில் மூன்று பேர் அனுமதி பெற்று Innocent Dhivya IAS (PA Of CM) அவர்களிடம் மனு கொடுத்தோம். பின்பு
    TRBல் மனு கொடுக்க முயற்சி செய்தோம்.

    மூன்றாவது நாள்:
    11 பேர் ஒன்றுகூடி பட்டதாரி ஆசிரியர்கள் போராட்டத்தில் கலந்து கொண்டு இடைநிலை ஆசிரியர்கள் சார்பான மேற்கண்ட கோரிக்கையை மீடியாக்களில் தெரிவிக்க முற்பட்ட போது காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு சேப்பாக்கம் மைதானம் அருகே மண்டபத்தில் அடைக்கப்பட்டோம்.

    நான்காம் நாள் :
    Trb அலுவலகம் முன்பு அமர்ந்து சுமார் 25 பேர் " கூடுதல் பணியிட அறிவிப்பு " வேண்டி பட்டதாரி ஆசிரியர்கள் ஆதரவுடன் உண்ணாவிரதம் இருந்தோம்.

    ஐந்தாவது நாள்:
    அன்றும் Trb அலுவலகம் முன்பு இடைநிலை ஆசிரிய நண்பர்கள் 21 நபர்கள் இணைந்து உண்ணாவிரதத்தைத் தொடர்ந்தோம்.கைது செய்யப்பட்டோம் .ஐயா திருமாவளவன் அவர்கள் வந்து நம்பிக்கை ஊட்டினார். இரவு பட்டதாரி ஆசிரியர்கள் நண்பர்கள் எங்களுக்கும் தங்குவதற்கான இடவசதி செய்து கொடுத்தனர்.

    ஆறாவது நாள்:

    இடைநிலை ஆசிரியர்கள் 32 பேர் இணைந்து பட்டதாரி ஆசிரியர்களுடன் Tamilnadu Election commission office முன்பு கூடி வாக்காளர் அடையாள அட்டைகளை ஒப்படைக்க முயற்சித்தோம்.விளம்பர பலகைகள் மூலமாக நமது கோரிக்கையை மீடியாக்களில் வெளிப்படுத்தினோம்.பின்னர் தலைமை செயலகம் நோக்கி பேரணி செல்ல முற்பட்ட போது காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு நெற்குன்றம் மண்டபத்தில் அடைக்கப்பட்டோம். அவ்விடத்தில் ஐயா ஜி.கே.மணி அவர்களும் வந்து நோக்கத்திற்கு வலு சேர்த்தார்.

    ஏழாவது நாள் :
    இன்று, Just 5 sgt members மட்டுமே இருந்ததால் செய்வதறியாது திக்கற்று நின்றோம். ஆனால் பட்டதாரி ஆசிரியர்கள் பெருமளவில் இருந்ததால் அவர்களது போராட்டபயணம் ஆளுனர் மாளிகை நோக்கி தளறாமல் சென்றது .


    ஓர் அனுபவம்...
    முதல் நாளில் நண்பர் ஒருவர் Hotel அறையில் "fan க்கு அடியில் பஞ்சு மெத்தையில் தான் படுப்பேன் " என அடம்பிடித்தார். ஆனால் நேற்றைய இரவிலோ திண்ணையைத் தேடி தேடி இடம்பிடித்தார்.

    எண்ணிக்கை குறைந்தாலும் நம்பிக்கை குறையவில்லை...
    இடம் மாறினாலும் தடம் மாறவில்லை. .

    பயணம் தொடரும் கூடுதல் உற்சாகத்துடன்...

    இப்படிக்கு
    கோயம்பேடு பஸ் நிலையத்தில்
    சத்தியமூர்த்தி 95433 91234, 9597239898
    சத்யஜித் 09663091690

    ( ஆயிரக்கணக்கான கொசு நண்பர்களுடன். .)









    ReplyDelete

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.