சிவகங்கையில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரி யர் கூட்டணி,
காளையார்கோவில் வட்டார பொதுக் குழு கூட்டம், தலைவர் ஆரோக்கியசாமி தலை மையில் நடந்தது. மாவட்ட தலைவர் அந்தோணிசாமி, பொன்ராஜ் முன்னிலை வகித்தனர்.
மாநில நிர்வாகி ஜோசப் சேவியர் பேசியதாவது: ஒன்றியங்களில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு சேமநல நிதி இருப்பு சீட்டு 8 ஆண்டுக்கு மேலாக வழங்காததால் முன்பணம் வாங்க தாமதம் ஏற்படுகிறது. 1995 முதல் அரசு உதவி பெறும் பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர் பணியிடத்தில் நியமனம் பெற்று பணியாற்றிய பட்ட தாரி ஆசிரியர்களுக்கு 8 ஆண்டுக்கான சம்பள நிர்ணயம் ரத்து செய்யப்பட்டது. இதற்கு எதிரான அரசாணை 155ஐ எதிர்த்து பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். ஐகோர்ட் டிவிஷன் பெஞ்ச் அரசாணை 155ஐ, அரசு செய்த மேல் முறையீட்டை ரத்து செய்து ஆசிரியர்களின் நியமன நாளான 1995 முதல் மொத்த பணிக்காலத்தை கணக்கில் எடுத்து சம்பளம் வழங்க உத்தரவிட்டுள்ளது. சம்பந்தப் பட்ட ஆசிரியர்களும் இது போன்று நிவாரணம் தேடலாம்,இவ்வாறு பேசினார்.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.