WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Monday, September 22, 2014

மத்திய அரசு பள்ளி ஆசிரியர் தகுதி தேர்வு

மத்திய அரசு பள்ளி ஆசிரியர் தகுதித்தேர்வு, கோவையில் நான்கு மையங்களில் நேற்று நடந்தது. மத்திய அரசு பள்ளிகளான கேந்திர வித்யாலயா, நவோதயா, சைனிக் உட்பட பள்ளிகளில், ஆசிரியராக பணியாற்றுவதற்கான தகுதித்தேர்வு, நேற்று நாடு முழுவதும் நடத்தப்பட்டது. கோவை மாவட்டத்தில், 1,5௦௦ பேர் விண்ணப்பித்தனர். கோவையில், அங்கப்பா சி.பி.எஸ்.இ., பள்ளி, பி.எஸ்.ஜி., பப்ளிக் பள்ளி, நேஷனல் மாடல் பள்ளி, சுகுணா பிப் பள்ளியில் தேர்வு நடந்தப்பட்டது. இதில், 1,243 பேர் தேர்வெழுதினர்; 257 பேர் பங்கேற்கவில்லை. ஆரம்பப்பள்ளி ஆசிரியர்களுக்கு காலை 8:30 மணி முதல் 11:00 மணி வரையும், 6,7,8,9ம் வகுப்பு ஆசிரியர்களுக்கு, பிற்பகல் 2:௦௦ மணி முதல் மாலை 4:30 மணி வரை என இரு கட்டங்களாக தேர்வு நடத்தப்பட்டது. தேர்வுகளை, ஒருங்கிணைப்பாளர்கள், மேற்பார்வையாளர்கள் கண்காணித்தனர். இத்தேர்வு சற்று கடினமாக இருந்ததாக, தேர்வெழுதிய ஆசிரியர்கள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.