WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Saturday, September 20, 2014

மேல்நிலை தேர்வு நடத்த மூவர் குழு : ஆசிரியர்கள் கோரிக்கை..

மேல்நிலை தேர்வுகளை நடத்த மூவர் குழுவை நியமிக்க வேண்டும், என
ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக, மாவட்ட செயற்குழு கூட்டம் காரைக்குடியில் நடந்தது. செயலாளர் சிவகுமார் வரவேற்றார். பொருளாளர் முத்து துரை, மகளிர் ஆசிரியர் செயலாளர் சகாய அருள்செல்வி, மாவட்ட தனியார் பள்ளி செயலாளர் தியாகராஜன், மாவட்ட இணை செயலாளர் பாண்டிக்குமார் பேசினர். மாவட்ட தலைவர் சுப்பிரமணியன் தலைமை வகித்து பேசியதாவது: காலாண்டு, அரையாண்டு, திருப்புதல் தேர்வு தவிர மற்ற இடை தேர்வுகள், மாத தேர்வுகள், தற்போது மூன்று மணி நேரமாக நடத்தப்படுகிறது. இதனால், கற்றல் கற்பித்தல், கால அவகாசம் குறைகிறது. எனவே, இதை ஒன்றரை மணி நேரமாக குறைக்க வேண்டும். வினாத்தாள் தயாரிக்கும், முதுகலை ஆசிரியர்களுக்கு, உழைப்பூதியம் மீண்டும் வழங்க வேண்டும். தேர்வுகளை நடத்த ஒரு தலைமை ஆசிரியர் மட்டுமே உள்ளார். இதை தவிர்த்து, ஒரு தலைமை ஆசிரியர், ஒரு கல்வி மாவட்டத்துக்கு முதுகலை ஆசிரியர் இருவர் வீதம் மூன்று பேர் கொண்ட குழுவை, அமைக்க வேண்டும், என்றார். மாநில பொதுக்குழு உறுப்பினர் ராதாகிருஷ்ணன் நன்றி கூறினார்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.