தரம் உயர்த்தப்பட்டுள்ள அரசு மேல்நிலைப்பள்ளிகளில் உருவாகியுள்ள முதுகலை ஆசிரியர் காலியிடங்களுக்கு பதவி உயர்வு பட்டியலிலுள்ள ஆசிரியர்களை நியமிக்க, பள்ளி கல்வித்துறை நடவடிக்கை எடுக்க கோரிக்கை எழுந்துள்ளது. தமிழகத்தில் 100 அரசு பள்ளிகள் மேல்நிலையாகவும், 50 உயர்நிலையாகவும் தரம் உயர்த்தப்படும் என, சட்டசபை கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது. முதலில் 100 பள்ளிகள் மேல்நிலையாக தரம் உயர்த்தி, பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.ஒவ்வொரு பள்ளியிலும் தலைமை ஆசிரியர் உட்பட 10 முதுகலை ஆசிரியர் புதிய பணியிடம் உருவாகியுள்ளது.
பதவி உயர்வு பட்டியல் ஆசிரியர்கள் கூறுகையில், ""அனைத்து பாடத்திலும் 2,500க்கும் மேற்பட்டோர் முதுகலை ஆசிரியர் பதவி உயர்விற்காக காத்திருக்கின்றனர். இவர்களில் 50 சதவீதம் பேரை தரம் உயர்வு பள்ளி காலியிடத்தில் நியமிக்க விதிமுறை உள்ளது. மாணவர்கள் பாதிக்காத வகையில் சீனியாரிட்டி அடிப்படையில் நியமிக்க வேண்டும். முதுகலை ஆசிரியருக்கான டி.ஆர்.பி., தேர்வு நடத்தி நியமிக்கலாம் என, பள்ளிக்கல்வித்துறை யோசித்தால் இக் கல்வியாண்டு முடிந்து விடும். காலம் தாழ்த்தாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றனர்.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.