WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Thursday, September 18, 2014

விஜயா வங்கியில் பாதுகாப்பு அதிகாரி பணி..

                         




பெங்களூரை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் விஜயா வங்கியில் காலியாக உள்ள 15 பாதுகாப்பு அதிகாரி பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து வங்கியின் அதிகார பூர்வமான இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விளம்பர எண்: 02/2014

நிறுவனம்: விஜயா வங்கி

காலியிடங்கள் எண்ணிக்கை: 15

பணி: பாதுகாப்பு அதிகாரி- ஸ்கேல்-II(பணிக் கோடு - 01)

கல்வித்தகுதி: அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து ஏதாவதொரு துறையில் இருந்து பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

அனுபவம்: இந்திய முப்படைகளில் ஏதாவதொன்றில் 5 வருடம் அதிகாரியாக பணிபுரிந்திருக்க வேண்டும் அல்லது காவல் துறையில் மாவல் துறை அதிகாரியாகவோ

அல்லது துணை ராணுவ படையில் அதிகாரியாகவோ பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: 01.08.2014 தேதியின்படி 21 - 45க்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: குழு விவாதம் அல்லது ஆன்லைன் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

சம்பளம்: மாதம் ரூ 19.400 - 28,100.

விண்ணப்பக் கட்டணம்: SC/ST பிரிவினருக்கு ரூ.50. ஓ.பி.சி. மற்றும் பொது பிரிவினருக்கு அறிவிப்பு கட்டணங்கள் ரூ.50 உள்பட ரூ.300.

விண்ணப்பிக்கும் முறை: www.vijayabank.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பித்தப் பிறகு அதனை

பிரிண்ட் அவுட் எடுத்து அதனுடன் தேவையான சான்றிதழ் நகல்கள் இணைத்து விண்ணப்ப கவரின் மேல் பகுதியில் " Application for the post of Prob.

manager security 2014 " என்று எழுதி Vijaya Bank, P.o.Box No: 5136, G.P.O. Bangalore - 560001. என்ற அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 03.10.2014

ஆன்லைன் விண்ணப்ப பிரிண்ட் அவுட் சென்று சேர கடைசி தேதி: 17.10.2014

மேலும் விண்ணப்பதாரர்களுக்கு எழும் சந்தேகங்களுக்கு முழுமையான விவரங்கள் அறிய


இணையதளத்தை பார்க்கவும்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.