WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Wednesday, October 8, 2014

ஐ.டி. துறையினருக்கு மேலும் ஒரு அதிர்ச்சி: 400 பணியாளர்களை வீட்டுக்கு அனுப்பும் யாஹு!!

பெங்களூர், அக். 8- மின்னஞ்சல் துறையில் முன்னணி நிறுவனமாக விளங்கும்
யாஹு நிறுவனம் தங்களது பெங்களூர் கிளையில் பணிபுரியும் ஊழியர்களின் எண்ணிக்கையை குறைக்க முடிவு செய்துள்ளது. தங்களது மென்பொருள் அபிவிருத்தி மையத்தில் பணிபுரியும் இந்த ஊழியர்களில் 400 ஊழியர்களை வீட்டுக்கு அனுப்ப அந்நிறுவனம் முடிவெடுத்துள்ளது. தங்களது நிர்வாக செலவுகளை குறைக்கும் நோக்கிலும், வளர்ச்சிக்கான புதிய வழிவகைகளை ஊக்குவிக்கும் பொருட்டும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து யாஹு நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “நிலையான வளர்ச்சியை நோக்கி யாஹு செல்வதை உறுதிசெய்யும் பொருட்டும், அதிக அளவிலான திறமையுடன் சாதனை படைக்கும் வகையிலும் ஒத்துழைப்பு மற்றும் கண்டுபிடிப்புகளை நிகழ்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதற்கு ஏதுவாக, நாங்கள் சில மாற்றங்களை செய்ய முடிவெடுத்து அதனை செயல்படுத்தியுள்ளோம்" என கூறியுள்ளது.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.