WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Friday, October 31, 2014

652 தொழிற்கல்வி பயிற்றுனர் காலிப் பணியிடங்களுக்கு உத்தேச பதிவு மூப்பு பட்டியல்?


காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறை மூலம், 652 தொழிற்கல்வி பயிற்றுனர் காலிப் பணியிடத்திற்கு, மாநில அளவில் பரிந்துரை செய்வதற்காக, உத்தேச பதிவுமூப்பு பட்டியல் தயார் செய்யப்பட உள்ளது.

இப்பணியிடத்திற்கு பி.எட்., கல்வித்தகுதியுடன் பி.எஸ்சி., கணினி அறிவியல் அல்லது பி.எட்., கல்வித் தகுதியுடன் பி.சி.ஏ., அல்லது பி.எட்., கல்வித்தகுதியுடன், பி.எஸ்.சி., தகவல் தொழில்நுட்பம் ஆகிய கல்வித் தகுதிகளில் ஏதேனும் ஒன்றை, காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில், பதிவு செய்திருக்க வேண்டும்.

கல்வித்தகுதியுடன் பதிவு செய்துள்ளவர்கள், தங்களது பெயர், பட்டியலில் இடம் பெற்றுள்ளதா என்பதை சரிபார்த்துக் கொள்ளலாம். பதிவுதாரர்கள், தங்களது அனைத்து கல்வி சான்றிதழ்கள் மற்றும் வேலைவாய்ப்பு அடையாள அட்டையுடன் (ஆன்-லைன் கார்டு) இன்றைக்குள், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு நேரில் வந்து சரிபார்த்துக் கொள்ளலாம். இவ்வாறு செய்திக்குறிப்பில் ஆட்சியர் தெரிவித்துள்ளா.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.