மத்திய அரசு அறிவித்தபடி
7 சதவீத அகவிலைப்படியை வழங்க வேண்டும்
தமிழக அரசுக்கு, பணியாளர்கள் சங்கம் கோரிக்கை
சென்னை, அக்.8-
தமிழக முதல்-அமைச்சருக்கு, தமிழ்நாடு அரசுப் பணியாளர் சங்கத்தின் மாநிலத்தலைவர் கு.பால்பாண்டியன் நேற்று அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாடு அரசுப்பணியாளர்கள் தற்போது 100 சதவீத அகவிலைப்படியை பெற்று வருகிறார்கள். கடந்த 1-ந் தேதி முதல் 7 சதவீத அகவிலைப்படி உயர்வினை மத்திய அரசு அறிவித்து, உயர்த்தப்பட்ட அகவிலைப்படியை மத்திய அரசு பணியாளர்கள் பெற்று வருகிறார்கள். ஆனால் மத்திய அரசுக்கு இணையாக, உயர்த்தப்பட்ட 7 சதவீத அகவிலைப்படியானது வழங்கப்படாமல் நிலுவையில் இருந்து வருகிறது. எனவே வரவுள்ள தீபாவளி உள்ளிட்ட பண்டிகை கால செலவுகளை எதிர்கொள்ளும் வகையில் நிலுவையாக உள்ள 7 சதவீத அகவிலைப்படியை கடந்த 1-ந் தேதி முதல் கணக்கிட்டு வழங்கிட உரிய உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.