WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Saturday, October 11, 2014

மத்திய அரசுக்கு இணையாக அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு 7 சதவீத அகவிலைப்படி உயர்வு

மத்திய அரசுக்கு இணையாக

அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு 7 சதவீத அகவிலைப்படி உயர்வு
முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்பு
சென்னை, அக்.11-

தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு 7 சதவீத அகவிலைப்படி உயர்வு வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட் டுள்ள அறிவிப்பு வருமாறு:-

வாழ்வாதாரத்தை பாதுகாத்த ஜெயலலிதா

மக்கள் பணியாற்றும் அரசு ஊழியர்களையும், கல்வி போதிக்கும் ஆசிரியர்களையும் ஊக்கப்படுத்தும் வகையில் பல்வேறு சலுகைகளை வழங்கியதோடு, மத்திய அரசுக்கு இணையான அகவிலைப் படியை மாநில அரசு ஊழியர்களுக்கும் அவ்வப்போது வழங்கி அவர்களுடைய வாழ்வாதாரத்தை பாதுகாத்தவர் முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா.

அவரது வழியில் ஆட்சி புரிந்து வரும் தமிழ்நாடு அரசு, மத்திய அரசு ஊழியர்களுக் கான அகவிலைப் படியை 1-7-14 முதல் அவர்களுடைய அடிப்படை ஊதியம் மற்றும் தர ஊதியத்தில் ஏழு சதவீதம், அதாவது 100 சதவீதத்தில் இருந்து 107 சதவீதமாக உயர்த்தி மத்திய அரசு வழங்கியுள்ளது.

ஏழு சதவீதம் உயர்வு

அதுபோல், தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான அகவிலைப் படியையும், அவர்களது அடிப்படை ஊதியம் மற்றும் தர ஊதியத்தில் ஏழு சதவீதம் உயர்த்திட தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

இந்த அகவிலைப் படி உயர்வு, உள்ளாட்சி நிறுவனங்கள் மற்றும் அரசு மானியம் பெறும் கல்வி நிறுவனங்களில் பணிபுரியும் அலுவலர்கள், ஆசிரியர்கள், வருவாய்த் துறையில் பணிபுரியும் கிராம உதவியாளர்கள், அங்கன்வாடி மற்றும் சத்துணவு ஊழியர்கள், ஊராட்சி உதவியாளர், எழுத்தர், ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் பெறுவோர் மற்றும் வழக்கமாக அகவிலைப்படி அளிக்கப்படும் அனைவருக்கும் பொருந்தும்.

ரொக்கமாக வழங்கப்படும்

இதனால் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் பெறுவோர் என சுமார் 18 லட்சம் பேர் பயனடைவார்கள். இந்த அதிகரிக்கப்பட்ட அகவிலைப்படி 1-7-14 முதல் கணக்கிடப்பட்டு ரொக்கமாக வழங்கப்படும். இந்த அகவிலைப் படி உயர்வு மூலம் அரசுக்கு ஆண்டொன்றுக்கு ஆயிரத்து 558 கோடியே 97 லட்சம் ரூபாய் செலவு ஏற்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த அகவிலைப்படி உயர்வு தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள ஆணையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

அரசாணை

இந்த அனுமதிக்கப்பட்ட திருத்தப்பட்ட அகவிலைப்படி, அரசு மானியம் பெறும் கல்வி நிறுவனங்களில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கும், ஆசிரியர் அல்லாத பிற அலுவலர் களுக்கும், உள்ளாட்சி அமைப்பு அலுவலர்களுக்கும், பல்கலைக் கழக மானியக்குழு, அனைத்திந்திய தொழில் நுட்பக் கல்விக் குழு சம்பள வீதங்களின் கீழ் வரும் அலுவலர்களுக்கும்,

அரசு மற்றும் மானியம் பெறும் பல்தொழில்நுட்பப் பயிற்சிப் பள்ளிகள், சிறப்பு பட்டயப் படிப்பு நிறுவனங்களில் பணியாற்றும் ஆசிரியர் கள், உடற்பயிற்சி இயக்குனர் கள், நூலகர்கள் ஆகியோருக் கும், வருவாய்த் துறையிலுள்ள கிராம உதவியாளர்களுக்கும்,

சத்துணவு திட்ட அமைப்பாளர்கள், குழந்தை நல அமைப்பாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், சத்துணவு சமையலர்கள், சமையல் உதவியாளர்கள், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் பணிபுரியும் ஊராட்சி உதவியாளர்கள், எழுத்தர்கள் மற்றும் சிறப்பு காலமுறை ஊதியத்தில் பணியாற்றும் துப்புரவுப் பணியாளர்கள் ஆகியோருக்கும் பொருந்தும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.