முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி
இருப்பதாவது:–
மக்கள் பணியாற்றும் அரசு ஊழியர்களையும், கல்வி போதிக்கும் ஆசிரியர்களையும் ஊக்கப்படுத்தும் வகையில் பல்வேறு சலுகைகளை வழங்கியதோடு, மத்திய அரசுக்கு இணையான அகவிலைப்படியை மாநில அரசு ஊழியர்களுக்கும் அவ்வப்போது வழங்கி அவர்களுடைய வாழ்வாதாரத்தை பாதுகாத்தவர் புரட்சித் தலைவி அம்மா.
புரட்சித் தலைவி அம்மாவின் வழியில் ஆட்சி புரிந்து வரும் தமிழ்நாடு அரசு, மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை 1.7.2014 முதல் அவர்களுடைய அடிப்படை ஊதியம் மற்றும் தர ஊதியத்தில் ஏழு விழுக்காடு, அதாவது 100 விழுக்காடிலிருந்து 107 விழுக்காடாக உயர்த்தி மத்திய அரசு வழங்கியுள்ளது போல், தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான அகவிலைப்படியையும், அவர்களது அடிப்படை ஊதியம் மற்றும் தர ஊதியத்தில் ஏழு விழுக்காடு உயர்த்திட முடிவு செய்துள்ளது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த அகவிலைப்படி உயர்வு உள்ளாட்சி நிறுவனங்கள் மற்றும் அரசு மானியம் பெறும் கல்வி நிறுவனங்களில் பணிபுரியும் அலுவலர்கள், ஆசிரியர்கள், வருவாய்த்துறையில் பணிபுரியும் கிராம உதவியாளர்கள், அங்கன்வாடி மற்றும் சத்துணவு ஊழியர்கள், ஊராட்சி உதவியாளர், எழுத்தர், ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் பெறுவோர் மற்றும் வழக்கமாக அகவிலைப்படி அளிக்கப்படும் அனைவருக்கும் பொருந்தும்.
இதனால் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் பெறுவோர் என சுமார் 18 லட்சம் பேர் பயனடைவார்கள். இந்த அதிகரிக்கப்பட்ட அகவிலைப்படி 1.7.2014 முதல் கணக்கிடப்பட்டு ரொக்கமாக வழங்கப்படும்.
இந்த அகவிலைப்படி உயர்வு மூலம் அரசுக்கு ஆண்டொன்றுக்கு 1,558 கோடியே 97 லட்சம் ரூபாய் செலவு ஏற்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.