WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Tuesday, October 21, 2014

பழுதான கட்டடத்தில் வகுப்பு நடத்தக் கூடாது?

கடலூர் மாவட்டத்தில் உள்ள, அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பழுதான
கட்டடங்களில் வகுப்புகள் நடத்த வேண்டாமென, தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில், கடந்த 14ம் தேதி முதல், தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் நீர்நிலைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. பொதுமக்கள் வெளியே வரமுடியாமல் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இதற்கிடையே, கடலூர் மாவட்டத்தில் உள்ள, அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பழுதான கட்டடங்களில் வகுப்புகள் நடத்த வேண்டாம் என, அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து கல்வித் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், "மழைக் காலம் துவங்கியுள்ளதால் பழுதான கட்டடங்களில் வகுப்புகள் நடத்தக் கூடாது. மின்கசிவு ஏற்பட்டால் மின்சார வாரியத்திற்கு தகவல் தெரிவித்து சரி செய்து கொள்ள வேண்டும். மழைநீர் தேங்கி நிற்கும் இடங்களில் மாணவர்களை விளையாட அனுமதிக்கக் கூடாது. கட்டுமான பணிகள் நடக்கும் இடங்களில் மாணவர்கள் செல்லாத வகையில் தடுப்புவேலி ஏற்படுத்த வேண்டும் என, சம்பந்தப்பட்ட பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது' .

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.