ராஜபாளையம்: தனியாரை போல், அரசு பள்ளிகளிலும் மாணவர்களுக்கான
கையேடு தயாரிக்கப்பட்டு ராஜபாளையத்தில் வழங்கப்பட்டது.
தனியார் பள்ளிகளில் கையேடு அளிக்கப்பட்டு மாணவர்களின் சுயகுறிப்புகள்,
மாதவாரியாக பள்ளி நாள் மற்றும் விடுமுறை, ஆண்டு தேர்வுகள் குறிப்பிடப்பட்டு
இருக்கும்.
சில கையேடுகளில், மாணவர்களின் மதிப்பெண், பெற்றோரிடம் கையெழுத்து பெறும்
பகுதி இருக்கும். இதேபோல் அரசு மேல்நிலைப் பள்ளிகளில், 10ம் வகுப்பு,
பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு முதன்முறையாக கையேடு
வழங்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு செய்திதாள் காகித நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டு, பள்ளி
கல்வித்துறை மூலம் ராஜபாளையத்தில் வழங்கப்பட்டது. மாணவ, மாணவிகளுக்கான
விதிகள், நலம் பேணல், பெற்றோர் கவனத்திற்கு என 21 தலைப்புகளில் 124
பக்கங்கள் உள்ளன.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.