திருப்பூர்: "கற்பித்தலில் புதுமையை வெளிப்படுத்த வேண்டும்" என, திருப்பூரில்
நடந்த புத்தாக்க பயிற்சி முகாமில், அறிவுறுத்தப்பட்டது.
நடந்த புத்தாக்க பயிற்சி முகாமில், அறிவுறுத்தப்பட்டது.
பள்ளி கல்வித்துறை மற்றும் அமராவதி நகர் ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் சார்பில், முதுகலை ஆசிரியர்களுக்கு புத்தாக்க பயிற்சி முகாம், திருப்பூர் அருள்புரம் ஜெயந்தி கல்வியியல் கல்லூரியில் துவங்கியது. மாவட்டம் முழுவதும் இருந்து 160 முதுகலை ஆசிரியர்கள் பங்கேற்றனர்.
முதன்மை கல்வி அலுவலர் முருகன் பேசுகையில், "மாணவர்களின் கல்வித்திறனை ஆசிரியர்கள் மேம்படுத்த வேண்டும். வரும் பொதுத்தேர்வு தேர்ச்சியில், திருப்பூர் மாவட்டம், மாநிலத்தில் முதலிடம் பெற வேண்டும். கற்பித்தலில் புதுமையான கல்வி முறையை புகுத்தி, மாணவர்களை தேர்ச்சி பெறச் செய்ய வேண்டும்" என்றார்.
ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர் திருஞானசம்பந்தன் பேசுகையில், "ஆசிரியர்களுக்கு புத்தாக்க பயிற்சி அளிப்பதன் மூலம், மாணவர்களின் தேர்ச்சி விகிதம் அதிகரிக்க வாய்ப்பாகிறது. வரும் தேர்வில், இன்னும் தேர்ச்சி விகிதம் அதிகரிக்க வேண்டும். "நல்ல முறையில் படிக்கும் மாணவனை, சிறந்த முறையில் அதிக மதிப்பெண் பெறச்செய்ய வேண்டும். சுமாராக படிக்கும் மாணவனை, நல்ல மதிப்பெண் பெறும் வகையில், தேர்வுக்கு தயார் செய்ய வேண்டும்.
அனைத்து மாணவர்களையும் தேர்ச்சி பெறச் செய்வதற்கான தீவிர முயற்சிகளை ஆசிரியர்கள் மேற்கொள்ள வேண்டும்" என்றார். சிக்கண்ணா அரசு கலை கல்லூரி பேராசிரியர்கள் பிரதீபா, சரவணன், சுரேஷ்குமார் மற்றும் ஆசிரியர் பயிற்சி நிறுவன கருத்தாளர்கள், மூத்த ஆசிரியர்கள் ஆகியோர், கணிதம் மற்றும் ஆங்கிலம் பாடங்கள் கற்பித்தல் முறை மற்றும் அதில் உள்ள யுக்தி குறித்து, முதுகலை ஆசிரியர்களுக்கு பயிற்சி அளித்தனர்.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.