WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Wednesday, November 5, 2014

10-ம் வகுப்பு, பிளஸ்2 அரையாண்டு பொதுத்தேர்வு அட்டவணை.DINAMANI

                  

தமிழகத்தில், டிசம்பர் மாதம் நடைபெறவுள்ள 10-ம் வகுப்பு மற்றும் பிளஸ்2 மாணவர்களுக்கான பொதுத்தேர்வு காலஅட்டவணையை பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

பிளஸ்2 தேர்வுகள் டிசம்பர் 10-ம் தேதி துவங்கி, டிசம்பர் 23-ம் தேதி வரையிலும், 10-ம் வகுப்பு தேர்வுகள் டிசம்பர் 12-ம் தேதி துவங்கி, டிசம்பர் 23-ம் தேதி வரையிலும் நடைபெறவுள்ளன.

10-ம் வகுப்பு மற்றும் பிளஸ்2 அரசு பொதுத்தேர்வுகளை எழுதும் மாணவ, மாணவியரை தயார் செய்யும் வகையில், சில ஆண்டுகளுக்கு முன்பு, காலாண்டு, அரையாண்டு தேர்வுகளை மாவட்டம் வாரியாக முதன்மைக் கல்வி அலுவலர் மூலம் ஒரே மாதிரியான வினாத்தாள்களை தயாரித்து, தேர்வுகள் நடத்தப்பட்டன. இதில் நல்ல முன்னேற்றம் தெரிந்ததை தொடர்ந்து, நடப்பு கல்வியாண்டு(2014-15) முதல் தமிழகம் முழுவதும் காலாண்டு, அரையாண்டு தேர்வுகளை ஒரே மாதிரியான வினாத்தாள்கள் மூலம் நடத்த பள்ளிக்கல்வித்துறை ஏற்பாடு செய்துள்ளது.

இந்த அடிப்படையில், காலாண்டு தேர்வுகள் நடத்தி முடிக்கப்பட்டுள்ளன. தற்போது அரையாண்டு பொதுத்தேர்வுக்கான கால அட்டவணையை தயாரித்து, பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.

இந்த காலஅட்டவணை மாவட்டம் தோறும் முதன்மைக் கல்வி அலுவலகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இந்த கால அட்டவணைப்படி அரையாண்டு பொதுத்தேர்வுகளை நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்யுமாறு முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.

10-ம் வகுப்பு தேர்வு அட்டவணை: 10-ம் வகுப்பு அரையாண்டு பொதுத்தேர்வு டிசம்பர் 12-ம் தேதி துவங்குகின்றன. டிசம்பர் 12-ம் தேதி மொழிப்பாடம் முதல்தாள், டிசம்பர்15-ம் தேதி மொழிப்பாடம் 2-ம் தாள், டிசம்பர் 16-ம் தேதி ஆங்கிலம் முதல் தாள், டிசம்பர் 17-ம் தேதி ஆங்கிலம் 2-ம் தாள், டிசம்பர் 19-ம் தேதி கணிதம், டிசம்பர்22-ம் தேதி அறிவியல், டிசம்பர்23-ம் தேதி சமூக அறிவியல் தேர்வுகள் நடைபெறும்.

பிளஸ்2 தேர்வு அட்டவணை: பிளஸ்2 அரையாண்டு பொதுத்தேர்வுகள் டிசம்பர் 10-ம் தேதி துவங்குகின்றன. டிசம்பர் 10-ம் தேதி மொழிப்பாடம் முதல் தாள், டிசம்பர்11-ம் தேதி மொழிப்பாடம் 2-ம் தாள், டிசம்பர் 12-ம் தேதி ஆங்கிலம் முதல் தாள், டிசம்பர் 15-ம் தேதி ஆங்கிலம் 2-ம் தாள், டிசம்பர் 16-ம் தேதி வணிகவியல், ஹோம் சயின்ஸ், பூகோளம், டிசம்பர்17-ம் தேதி கணிதம், மைக்ரோ பயாலஜி, விலங்கியல், நியூட்ரிசன், டெக்ஸ்டைல் டெக்னாலஜி, உணவு நிர்வாகம் மற்றும் குழந்தை பராமரிப்பு, செவிலியர் படிப்பு, செவிலியர் படிப்பு(பொது), அக்கவுண்டன்சி, டிசம்பர் 18-ம் தேதி இயற்பியல், பொருளாதாரம், பொது இயந்திரவியல், எலக்ட்ரானிக்ஸ் கருவிகள், டிசம்பர்19-ம் தேதி கம்யூனிக்கேட்டிவ் ஆங்கிலம், இந்திய கலாச்சாரம், கணினி அறிவியல், தட்டச்சு ஆங்கிலம் மற்றும் தமிழ், புள்ளியல், டிசம்பர் 22-ம் தேதி வேதியியல், அக்கவுன்ட்ன்சி, டிசம்பர்23-ம் தேதி உயிரியல், தாவரவியல், வரலாறு, வணிகக்கணிதம் பாடங்கலுக்கு தேர்வுகள் நடைபெறும், என அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.