WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Saturday, November 8, 2014

100 சதவீத தேர்ச்சிக்கு உழைக்காதஆசிரியர்கள் மீது நடவடிக்கை:இணை இயக்குனர் எச்சரிக்கை

“பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 ல் 100 சதவீத வெற்றிக்கு உழைக்காத ஆசிரியர்கள்
மீது நடவடிக்கை எடுக்க கல்வித்துறை தயங்காது,” என மெட்ரிக் பள்ளிகளின் இணை இயக்குனர் கார்மேகம் எச்சரித்துள்ளார்.கடந்த கல்வியாண்டில் பத்து மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வில் 80 சதவீதம் அதற்கு குறைவான தேர்ச்சியை பெற்ற அரசு பள்ளிகளின் ஆசிரியர்களுக்கான ஆய்வுக்கூட்டம் காரைக்குடியில் நடந்தது. முதுகலை ஆசிரியர்கள் ஆய்வு கூட்டத்தில் மெட்ரிக் பள்ளிகளின் இணை இயக்குனர் கார்மேகம் ஆலோசனை வழங்கினார்.

அவர் பேசியதாவது:

 பிளஸ் 2 ல் 80 சதவீத தேர்ச்சி என்பது போதாது.100 சதவீத தேர்ச்சியை பெற ஆசிரியர்கள் கடுமையாக உழைக்கவேண்டும். படிப்பில் பின்தங்கிய மாணவர்கள் மீது அதிக கவனம் செலுத்த வேண்டும். கல்வித் துறை ஆலோசனைகளை பெற வேண்டும். அடுத்த பொதுத் தேர்விற்குள் இன்னொரு முறை ஆய்வுக் கூட்டம் நடத்தப்படும். இதில், தேவையான ஆலோசனைகள் வழங்கப்படும் இதன் பின்னரும் 100 சதவீத தேர்ச்சியை எட்டாத பள்ளி களில் பணிபுரிந்த ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க கல்வித்துறை தயங்காது, என்றார்.


No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.