WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Tuesday, November 25, 2014

ஆசிரியர்களுக்கான எழுத்துத் தேர்வுக்கு 10 ஆயிரம் விண்ணப்பம் விற்பனை!!!

விழுப்புரம்: முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான போட்டி எழுத்துத் தேர்வு
எழுத, மாவட்டத்தில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பம் பெற்றனர். கடந்த 2013-14 மற்றும் 2014-15ம் ஆண்டிற்கான முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு போட்டி எழுத்து தேர்வு வரும் 10.1.2015 அன்று, ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நடக்கிறது. சென்னையில் ஆசிரியர் தேர்வு வாரியத்திலிருந்து போட்டித் தேர்வுக்கான விண்ணப்பங்கள், மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்திற்கு வரப் பெற்றுள்ளது. விழுப்புரம் சி.இ.ஓ., அலுவலகத்தில் கடந்த 10ம் தேதி முதல் விண்ணப்பங்கள் (ஒரு விண்ணப்பம் ரூ.50 விலை) விற்பனை செய்யப்படுகிறது. இதற்காக 11 ஆயிரத்து 200 விண்ணப்பங்கள் வரவழைத்து, நேற்று வரை 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டவை, வினியோகம் செய்யப்பட்டுள்ளது. பூர்த்தி செய்த விண்ணப்பங்களை வரும் 26ம் தேதி மாலை 5:00 மணிவரை சமர்ப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. பூர்த்தி செய்த விண்ணப்பங்களை சரி பார்த்து பெறும் இடத்தில், அதிகமானோர் காத்திருக்கும் நிலை உள்ளது. கூட்ட நெரிசலை தவிர்க்கவும், வெளியூர்களில் இருந்து விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வருவோர் நீண்ட நேரம் காத்திருப்பதை தவிர்க்கும் வகையிலும், சி.இ.ஓ., அலுவலகத்தில் விண்ணப்பம் பெறுவதற்கு கூடுதல் பணியாளர்களை நியமிக்க வேண்டும்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.