பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான தேசிய திறனறி தேர்வு நேற்று நடந்தது. அதில் தமிழகம் முழுவதும் 1 லட்சத்து 42 ஆயிரம் மாணவ, மாணவியர் தேர்வு எழுதினர். பள்ளிகளில் பத்தாம் வகுப்பில் படிக்கும் மாணவர்களுக்கு ஆண்டுதோறும் தேசிய அளவிலான திறனறி தேர்வு நடத்தப்படுகிறது. இந்த தேர்வின் முதல் நிலை தேர்வு நவம்பர் மாதம் நடத்தப்படும். நாடு முழுவதும் நடக்கும் இந்த முதல்நிலைத் தேர்வில், தேர்ச்சி பெறுவோருக்கு தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மையம்(என்சிஇஆர்டி) இரண்டாம் நிலை தேர்வை நடத்தும். அதில் நாடு முழுவதும் 1000 மாணவர்களை தேர்வு செய்து அகில இந்திய அளவில் கல்வி உதவித் தொகை வழங்குவார்கள். இந்த கல்வி உதவித் தொகை கடந்த ஆண்டு வழங்கப்பட்ட போது தமிழகத்தில் 72 மாணவ, மாணவியர் பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த ஆண்டுக்கான முதல்நிலைத் தேர்வை அரசுத் தேர்வுகள் இயக்ககம் நேற்று நடத்தியது. தமிழகத்தில் மட்டும் 1 லட்சத்து 42 ஆயிரம் மாணவ, மாணவியர் எழுதினர். தமிழகத்தில் தேர்வு எழுதிய மாணவர்களுக்காக 342 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தன. இரண் டாம் நிலைத் தேர்வு வரும் மே மாதம் நடக்க உள்ளது.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.