WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Thursday, November 27, 2014

அண்ணாமலைப் பல்கலை: தொலைதூரத்தில் விண்ணப்பிக்க டிச.,1 கடைசி.

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக தொலைதூரக்கல்வி மையத்தில்
மொத்தம் சுமார் 3 லட்சம் பேர் பயிலுகின்றனர்.  இந்த கல்வி ஆண்டில் மாணவ, மாணவியர்கள் சேர்ந்து பயில விண்ணப்பிக்க டிச.1-ம் தேதி கடைசி நாளாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 259 படிப்புகள்: அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் சேவையை கருதி 1979-ல் தொலைதூரக்கல்வி இயக்ககம் தொடங்கப்பட்டது.  அண்ணாமலைப் பல்கலை. தொலைதூரக்கல்வி மையத்தில் புதுதில்லி தொலைதூரக்கல்வி கவுன்சில் (Distance Education Council, New Delhi) அனுமதி பெற்ற  மொத்தம் 259 படிப்புகள் நடத்தப்படுகின்றன. மருத்துவம் படிப்புகள் 12-ம், மருந்தியல் படிப்புகள் 2-ம்.  வேளாண் படிப்புகள்- 9-ம், பொறியியல் படிப்புகள் 53-ம் மற்றும் கலை, அறிவியல், தமிழ், இசை உள்ளிட்ட துறைகளைச் சார்ந்த பல்வேறு இளங்கலை, முதுகலை, டிப்ளமா, முதுநிலை டிப்ளமா படிப்புகள் நடத்தப்படுகின்றன. 3லட்சம் பேர் பயிலுகின்றனர்: தொலைதூரக்கல்வி மையத்தில் சுமார் 3 லட்சத்து 1940 பேர் பயின்று வருகின்றனர். கடந்த ஆண்டு மட்டும் மொத்தம் 1 லட்சத்து 35 ஆயிரத்து 95 பேர் அனுமதி சேர்க்கை செய்துள்ளனர். இந்த ஆண்டு சுமார் 1.50 லட்சம் அனுமதி சேர்க்கை செய்வார்கள் என எதிபார்க்கப்படுகிறது.
கல்வி உதவித்தொகை:
தொலைதூரக்கல்வி மையத்தில் தொழில்படிப்பு பயிலும் எஸ்சி., எஸ்டி மாணவர்களுக்கும், பார்வையற்றோர் மற்றும் மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கும் தமிழகஅரசால் வழங்கப்படும் கல்வி உதவித்தொகை பெற்றுத்தரப்படுகிறது.  இந்த கல்வி ஆண்டில் மாணவர்கள் சேருவதற்கான விண்ணப்பிக்கும் தேசி டிச.1-ம் தேதி கடைசி நாளாகும் என அண்ணாமலைப் பல்கலைக்கழக தொலைதூரக்கல்வி இயக்கக இயக்குநர் முனைவர் ஆர்.எம்.சந்திரசேகரன் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.