முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கான விண்ணப்பங்களை
வாங்குவதற்கும், நிறைவு செய்த விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதற்கும் புதன்கிழமை (நவ.26) கடைசி நாளாகும்.
வாங்குவதற்கும், நிறைவு செய்த விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதற்கும் புதன்கிழமை (நவ.26) கடைசி நாளாகும்.
இந்தத் தேர்வுக்கான விண்ணப்பங்கள் நவம்பர் 10-ஆம் தேதி முதல் விநியோகிக்கப்பட்டு வருகின்றன. இதுவரை சுமார் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
1,807 முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான அறிவிப்பாணையை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டது. இந்தப் பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு ஜனவரி 10-ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்தத் தேர்வுக்கான விண்ணப்பங்கள் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகங்களில் விநியோகிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதற்காக 1.80 லட்சம் விண்ணப்பங்கள் அச்சடிக்கப்பட்டிருந்தன. சென்னையில் இந்தத் தேர்வுக்கான விண்ணப்பங்கள் சென்னை நந்தனத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் விநியோகிக்கப்படுகின்றன.
.jpg)
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.