WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Wednesday, November 12, 2014

அடுத்த 24 மணி நேரத்துக்கு கடலோர மாவட்டங்களில் பலத்த மழை பெய்யும்: வானிலை மையம்?

                                           அடுத்த 24 மணி நேரத்துக்கு கடலோர மாவட்டங்களில் பலத்த மழை பெய்யும்: வானிலை மையம்                                                                                          காற்றழுத்த தாழ்வு வலுவடைந்தது: கடலோர மாவட்டங்களில் கனமழை


சென்னை, நவ. 12–


அடுத்த 24 மணி நேரத்துக்கு கடலோர மாவட்டங்களில் பலத்த மழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.


சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் ரமணன் கூறியதாவது:–

அந்தமான் அருகே நேற்று தென்கிழக்கு வங்கக் கடலில் நிலை கொண்டு இருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு நோக்கி தமிழகம் அருகே நகர்ந்துள்ளது.


அது தென்மேற்கு வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக நிலை கொண்டுள்ளதால் நேற்று இரவு முதல் பலத்த மழை பெய்தது.

நெல்லை மாவட்டம் பாபநாசத்தில் 7 செ.மீ., ஆவடியில் 6 செ.மீ., அம்பத்தூர், புழல், மாதவரம், எண்ணூரில் 4 செ.மீ., தரமணி, நாகப்பட்டினம், சென்னை விமான நிலையம், திருச்சியில் 3 செ.மீ., செங்கல்பட்டில் 2 செ.மீ. மழை பெய்துள்ளது.

அடுத்த 24 மணி நேரத்தில் கடலோர மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களிலும், உள் மாவட்டங்களில் ஒரு சில பகுதிகளிலும் மழை பெய்யும். கடலோர மாவட்டங்களில் சில இடங்களில் கனமழை பெய்யும்.

சென்னையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். வருகிற 15–ந்தேதியில் இருந்து மழை குறைந்து விடும்.
பொதுவாக காற்றழுத்த தாழ்வு நிலையாக இருந்தால் மழை நின்று பெய்யும். காற்றழுத்த தாழ்வு பகுதியாக இருந்தால் 2 நாளில் மழை பெய்து விட்டு வேகமாக சென்று விடும்.


இவ்வாறு ரமணன் கூறினார்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.