WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Saturday, November 1, 2014

குரூப் 4 தேர்வு மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச பயிற்சி வகுப்பு

சென்னை கலெக்டர் சுந்தரவல்லி வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் குரூப் 4 தேர்வு வரும் டிசம்பர் 21ம் தேதி நடைபெறுகிறது. இத்தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள மாற்றுத் திறனாளிகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள், மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடத்தப்பட உள்ளன. இப்பயிற்சி வகுப்பில் பொதுத்தமிழ், பொது அறிவு, நடப்பு நிகழ்வுகள், மனத்திறன், உளச்சார்பு, நேர நிர்வாகம் உள்ளிட்ட தலைப்புகளில் வகுப்புகள் நவம்பர் 5 முதல் 16ம் தேதி வரை நடைபெற உள்ளன. பயிற்சி வகுப்பில் சேர விரும்பும் மாற்றுத் திறனாளிகள் கிண்டியிலுள்ள ஒருங்கிணைந்த மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தை நேரில் அணுகலாம். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.