"எம்.பில்., - பி.எச்.டி., பயிலும் ஆசிரியர்களால், பள்ளிகளில் கற்பித்தல் பணி சிறிதும் பாதிக்கக்கூடாது,' என, தொடக்க கல்வி இயக்குனரகம் அறிவுறுத்தியுள்ளது.
ஊராட்சி ஒன்றிய பள்ளிகள், மாநகராட்சி மற்றும் அரசு துவக்கப்பள்ளிகள் மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் சிலர், எம்.பில்., - பி.எச்.டி., படிக்கின்றனர். பணியில் உள்ள ஆசிரியர்கள், உயர்கல்வி பயில முன்அனுமதி கேட்டு, தொடக்க கல்வி இயக்குனரகத்துக்கு கடிதம் அனுப்புவது வழக்கம். இதற்கான அனுமதியை அந்தந்த பகுதி உதவி தொடக்க கல்வி அலுவலர் அல்லது கூடுதல் தொடக்க கல்வி அலுவலரே வழங்கலாம் என தொடக்க கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. தொடக்க கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிவுறுத்தலில், "உயர்கல்வி பயில்வதற்கு ஆசிரியர்களுக்கு அனுமதி வழங்கும் முன், நிபந்தனையை பின்பற்ற வேண்டும். எக்காரணத்தை முன்னிட்டும், கற்பித்தல் பணி பாதிக்கக்கூடாது. தனது கடமையில் இருந்து ஆசிரியர் சிறிதும் விலகக்கூடாது. மாவட்ட தொடக்க கல்வி அலுவலர்கள், உதவி தொடக்க கல்வி அலுவலர்களுக்கு அறிவுரை வழங்க வேண்டும்,' என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.