WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Friday, November 28, 2014

PGTRB : 1,807 இடங்களுக்கு 2 லட்சம் விண்ணப்பங்கள்

தமிழகத்தில் காலியாக உள்ள, 1,807 முதுநிலை ஆசிரியர் பணியிடங்களுக்கு, 2 லட்சத்திற்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் வழங்கப்பட்டுள்ளன.தமிழக பள்ளிகளில் காலியாக உள்ள, 1,807 முதுநிலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை, சமீபத்தில், ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.,) வெளியிட்டது.இதற்கான தேர்வு, ஜன., 10ம் தேதி நடக்க உள்ளது. விண்ணப்பங்கள், அந்தந்த மாவட்ட கல்வி அலுவலகங்களில், கடந்த, 10ம் தேதி முதல் வழங்கப்பட்டன.

இதில், கடந்த, 25ம் தேதி காலை, சென்னையில் விண்ணப்பங்கள் காலியானதால், பிரச்னை ஏற்பட்டது. தொடர்ந்து, வேலுாரில் இருந்து விண்ணப்பங்கள் கொண்டு வரப்பட்டு வழங்கப்பட்டன.அன்று வரை, சென்னையில், 13 ஆயிரம் உட்பட, தமிழகம் முழுவதும், 1.40 லட்சம் விண்ணப்பங்கள் விற்பனை ஆனதாக, டி.ஆர்.பி., வட்டாரத்தில் கூறப்பட்டது.

இறுதி நாளான நேற்று முன்தினம் மாலை வரை, 2 லட்சத்திற்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள்

வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

1 comment:

  1. வெய்ட்டேஜை ரத்துசெய்ய கோரியும், அடுத்த பணிநியமனங்களில் முன்னுரிமை தரக்கோரியும் மீண்டும் ஓர் புரட்சி; தயராக இருங்கள்

    கடந்த மாதம் செப்டம்பர் முழுவதும் ஆசிரியர் தகுதித்தேர்வில் வெய்ட்டேஜ் முறையை ரத்து செய்யக்கோரி பலகட்ட போராட்டங்களை நடத்தினோம் இன்று வரை நமக்கு நியாயம் கிடைக்கவில்லை...

    தற்போது ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சிப்பெற்ற பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர் அமைப்பின் நிர்வாகிகள் வரும் திங்கள் சென்னை செல்ல உள்ளனர்....

    வரும் டிசம்பர் 4ம் தேதி முதல் தமிழக சட்டபேரவை கூடவுள்ளது இந்நேரத்தில் நாம் நம் கோரிக்கைகளை முறையாக முதல்வர் மாண்புமிகு ஒ.பன்ணீர்செல்வம் அவர்களிடம் மற்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.சி.வீரமணி அவர்களிடமும் மேலும் திண்டுக்கல் உறுப்பினர் பாலபாரதி மேடம் போன்ற சமூக சிந்தனையாளர்களிடம் மனு கொடுத்து நமக்கக குரல் கொடுக்க வேண்டுவோம்...

    ஒருவேளை நம் கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டாள் போராடவும் தயாராக இருக்கிறோம் ஆசிரியர் சொந்தங்களே!!! நீங்களும் தயாராக இருங்கள்

    இதைப் படித்து விட்டு பேஸ்புக் மற்றும் வாட்ஸப், கல்வி வலைதளம் அனைத்திலும் பதிவிடுங்கள்....உங்களால் முடிந்த சிறு உதவியாவது செய்யலாமே!!!

    மேலும் உணர்வோடு பேச
    செல்லத்துரை 98436 33012
    கபிலன் 90920 19692
    ராஜலிங்கம் புளியங்குடி
    95430 79848

    ReplyDelete

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.