முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணிக்கு 1,807 பேர் எழுத்துத்தேர்வு மூலம் தேர்ந்து எடுக்கப்பட உள்ளனர். தேர்வுக்கான விண்ணப்பம் தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும் நேற்று முதல் வழங்கப்படுகிறது. விண்ணப்பத்தின் விலை ரூ.50 ஆகும்.
சென்னையில் நந்தனம் அரசு மேல்நிலைப்பள்ளியில் விண்ணப்பம் வழங்கப்பட்டது. முதுகலை பட்டதாரிகள் மற்றும் அவர்களுக்காக அவர்களின் உறவினர்கள் வந்து விண்ணப்ப படிவத்தை வரிசையில் நின்று பெற்றுச்சென்றனர். இந்தபடிவம் 26-ந்தேதி வரை வழங்கப்படுகிறது. அன்றுதான் பூர்த்தி செய்த படிவத்தை சமர்ப்பிக்கவும் கடைசி நாள்.
இந்த படிவம் 2 லட்சத்து 75 ஆயிரம் வரை விற்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டு அனைத்து முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது. எழுத்துத்தேர்வு வருகிற ஜனவரி மாதம் 10-ந்தேதி நடைபெறுகிறது.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.