WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Tuesday, November 11, 2014

சிறுபான்மை மொழி ஆசிரியர் கவுன்சலிங் 13ல் நடக்கிறது

பள்ளிக் கல்வித்துறையின் கீழ் இயங்கும் அரசு உயர்நிலை, மேனிலைப்
பள்ளிகளில் காலியாக உள்ள சிறுபான்மை மொழிப்பாடங்களை நடத்தபட்டதாரி ஆசிரியர்கள் நேரடியாக நியமனம் செய்யப்படுகின்றனர். இதற்கான கவுன்சலிங் 13ம் தேதி காலை 11 மணிக்கு அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்களில் இணையதளம்மூலமாக நடக்கிறது. தெலுங்கு மொழியில் கணக்கு, அறிவியல், சமூக அறிவியல் பாடங்களுக்கும், மலையாள மொழியில் கணக்கு, அறவியல் பாடங்களுக்கும், கன்னட மொழியில் கணக்கு பாடத்துக்கும், உருது மொழியில் கணக்கு, அறிவியல் பாடங்களுக்கும் ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர். கவுன்சலிங் நடக்கும்போது, ஆசிரியர் தேர்வு வாரியத்தால் ஏற்கெனவே தெரிவு செய்யப்பட்டு ஆணை பெற்றவர்கள் மட்டுமே கலந்து கொள்ள முடியும். கவுன்சலிங்கில் கலந்து கொள்ள தகுதி உடையவர்கள் டிஆர்பி வழங்கிய தெரிவு சான்று, கல்விச் சான்று, உள்ளிட்ட மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களிடம் கொடுக்க வேண்டும்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.