WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Monday, December 15, 2014

ஆதிதிராவிடர் நல கல்லூரி மாணவர் விடுதியில் ஒரே அறையில் 25 பேர் ! குளிக்க, குடிக்க, சமைக்க உப்பு தண்ணீர் தான்.

                                   


கோடம்பாக்கம்: கோடம்பாக்கம் ஆதிதிராவிடர் நலக் கல்லுாரி மாணவர் விடுதியில், ஐந்து பேர் தங்க வேண்டிய ஒரு அறையில், 25 பேரை தங்க வைத்துள்ளதால், மாணவர்கள் மனஉளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். காலையில் சமைக்கப்படும் சாம்பாரை, இரவில் தருவதால், தரமற்ற உணவை உண்ண வேண்டிய அவலம் தொடர்கிறது.கோடம்பாக்கம், ரங்கராஜபுரம் பிரதான சாலை, சக்தி நகரில், ஆதிதிராவிடர் நலக் கல்லுாரி மாணவர் விடுதி உள்ளது. பழைய கட்டடத்தில், 37 அறைகளும், புதிய கட்டடத்தில், ஏழு அறைகளும் உள்ளன.

* விடுதிக்குள் நுழையும்போதே, துர்நாற்றம் வீசுகிறது. ஒரே அறையில், 25 மாணவர்கள் தங்க வைக்கப்படுகின்றனர். இதனால், இட நெரிசலில் மாணவர்கள் சிக்கி பரிதவிக்கின்றனர்.


* காலையில் சமைக்கப்படும் சாம்பார், இரவிலும் தரப்படுகிறது. கெட்டுப்போன குழம்பை சாப்பிட முடியாமல், பல மாணவர்கள் இரவு சாப்பாட்டை தவிர்க்கின்றனர்.


* மூன்று வேளையும் சாதம், சாம்பார் தான் வழங்கப்படுகிறது.


* குளிக்க, குடிக்க, உப்புத்தன்மை கொண்ட நிலத்தடிநீர் பயன்படுத்தப்படுகிறது. இதனால், தரமற்ற உணவு பரிமாறப்படுகிறது என, மாணவர்கள் புகார் கூறியுள்ளனர்.


* கழிப்பறைகள் சரிவர பராமரிக்கப்படாததால், துர்நாற்றம் வீசுவதோடு, சுற்றுச்சூழலுக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. போதுமான, கழிப்பறை வசதிகளும் இல்லை.


* மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் கழிப்பறைகள் மிக மோசமான நிலையில் உள்ளன.


இதுகுறித்து, விடுதி காப்பாளர் கூறியதாவது:


மொத்தம், 350 மாணவர்கள் தங்க வேண்டிய நிலையில், இங்கு படிக்கும், மாணவர்கள் அவர்கள் நண்பர்களையும் தங்க வைத்து உள்ளனர். பணியாளர் பற்றாக்குறை நிலவுகிறது. வாரத்தில் இரண்டு நாள், கோழி ஆட்டிறைச்சி கொடுக்கிறோம். இவ்வாறு, அவர் கூறினார்.


விடுதியில் தங்கி, நந்தனம் கலைக் கல்லுாரியில் பயின்று வருகிறேன். ஐந்து பேர் தங்க வேண்டிய அறையில், 25 பேரை தங்க வைக்கின்றனர். விடுதி கட்டடமும் சிதிலமடைந்த நிலையில் உள்ளது.


வினோத்


திண்டிவனம்

சென்னை புதுக் கல்லுாரியில் படிக்கிறேன். இடநெருக்கடி, மன உளைச்சல் காரணமாக, படிக்க முடியவில்லை. விடுதிக்குள் நுழைந்தாலே துர்நாற்றம் வீசுகிறது

ரகுராம்

விழுப்புரம்
நந்தனம் கல்லுாரியில் படிக்கிறேன். விடுதியில், சாப்பிடவும், குளிக்கவும் ஒரே தண்ணீர் தான். சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் இல்லை. என்னை போன்ற வசதியற்றோர் வேறு வழியின்றி இருக்கிறோம்


விக்னேஷ்


மேல்மருவத்துார்

சென்னை மாநில கல்லுாரியில் படிக்கிறேன். விடுதியில் உள்ள நுாலகம் செயல்படவில்லை. அதற்குள் கட்டுமான பொருட்கள் கொட்டி வைக்கப்பட்டு உள்ளன. நுாலகத்தை மாணவர் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்


அஜித்குமார்


அரக்கோணம்

விடுதியில் உள்ள கழிப்பறைகள், சமையலறை, விடுதி வளாகம், விடுதி கட்டடம், ஆகியவற்றை சுத்தம் செய்ய, இரண்டு பேர் மட்டுமே உள்ளோம். வேலை பளு அதிகரித்துள்ளதோடு, பணிகளில் தொய்வும் ஏற்பட்டுள்ளது


ஸ்ரீனிவாசன்


துப்புரவாளர்

* அதில், சென்னையில் உள்ள, அரசு மற்றும் தனியார் கல்லுாரிகளில் பயிலும், மாற்றுத்திறனாளிகள் 80 பேர் உட்பட, 350 மாணவர்கள் தங்கியுள்ளனர்.




No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.