WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Monday, December 15, 2014

பயங்கரவாதிகளால் பலர் சிறைப்பிடிப்பு : ஆஸி ., போலீசார் சுற்றி வளைப்பு&அடுத்த குறி எங்களுக்கு பெங்களூரு ! ஐ.எஸ். பயங்கரவாதிகள் எச்சரிக்கை.









: ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரின் மையப் பகுதியில் உள்ள ஒரு சிற்றுண்டியில் நுழைந்த பயங்கரவாதிகள் 2 பேர் துப்பாக்கி முனையில் பலரை பிணையக்கைதிகளாக சிறைப்பிடித்து வைத்துள்ளனர். அங்கு ஒரு பயங்கரவாத அமைப்பின் கொடி காணப்பட்டதாக தகவல் போலீசாருக்கு கிடைத்துள்ளது. பயங்கரவாதிகளிடம் இருந்து 5 பேர் தப்பி ஓடி வந்தனர். தொடர்ந்து பிணைக்கதைிகளை மீட்கும் பணியில் போலீஸ் படையினர் ஈடுபட்டுள்ளனர். 
தற்போது அப்பகுதி முழுவதும் போலீசாரின் கட்டுப்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர்.அங்குள்ள முக்கிய அலுவலகங்களிலிருந்து பணியாளர்கள் பாதுகாப்பாக வெளியேற்றபட்டுள்ளனர்.




10 சிற்றுண்டி விடுதி பணியாளர்கள் மற்றும் 30 வாடிக்கையாளர்கள் பயங்கரவாதிகளின் பிடியில் இருப்பதாக கூறப்படுகிறது. அவர்கள் அனைவரும் விடுதியில் உள்ள ஜன்னல் அருகே பயங்கரவாதிகளால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர். விடுதிக்குள் இருக்கும் பயங்கரவாதிகளை தொடர்பு கொள்ள போலீசார் தொடர்ந்து முயற்சித்து வருகின்றனர்.


சிட்னியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் :

பாதுகாப்பு கருதி சிட்னி நகரில் துறைமுக பாலம், அமெரிக்க தூதரகம் உள்ளிட்டவைகள் மூடப்பட்டுள்ளன. பயங்கரவாதிகளின் பிடியில் இருக்கும் விடுதி அமைந்துள்ள கட்டிடத்தில் இருப்பவர்களும், அதனைச் சுற்றி உள்ள கட்டிடத்தில் இருப்பவர்களும் பத்திரமாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.சிட்னி நகரின் மீது விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. ரயில் சேவை மற்றும் பஸ்கள் வழக்கம் போல் இயங்கும் எனவும், குறிப்பிட்ட பகுதிக்கு செல்லும் போக்குவரத்து சேவை மாற்றுப்பாதையில் இயக்கப்படும் என சிட்னி நகர கமிஷ்னர் தெரிவித்துள்ளார். சிட்னி நகரில் பாதுகாப்பு நிலை குறித்தும், அங்கும் அமெரிக்க தூதரக பாதுகாப்பு குறித்தும் அமெரிக்க அதிபர் ஒபாமா, தூதரக அதிகாரிகளை தொடர்பு கொண்டு கேட்டறிந்து வருகிறார்.


ஆஸ்திரேலிய பிரதமர் கவலை
ஆஸ்திரேலியாவின் சிட்னியில் உள்ள சிற்றுண்டியில் 13 பேர் பிணையக்கைதிகளாக சிறைபிடிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து அந்த பகுதியை போலீசார் சுற்றி வளைத்துள்ளனர். சம்பவ இடத்தில் ஐ.எஸ்.ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பின் கொடி உள்ளதாக கூறப்படுவதால் பதற்றம் அதிகரித்துள்ளது. இந்நிலையில், பிணையக்கைதிகள் சிறைபிடிக்கப்பட்டுள்ளது கவலையளிப்பதாகவும், பாதுகாப்பு படையினருக்கு நன்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது எனவும் ஆஸ்திரேலிய பிரதமர் டோனி அபாட் கூறியுள்ளார். தொடர்ந்து பத்திரிகையாளர்களை சந்தித்து இது குறித்து பேசிய பிரதமர் அபாட், தீவிரவாத அச்சுறுத்தலை முறியடிப்போம். 13 பேரை பிடித்து வைத்துள்ள தீவிரவாதிகளின் நோக்கம் என்ன என்பது இதுவரை தெரியவில்லை. அரசியல் பழிவாங்கும் நோக்கம் ஏதும் உள்ளதா என தெரியவில்லை. ஆஸ்திரேலியா அமைதியும், ஒருமைப்பாடும் நிறைந்த நாடு. அந்த நிலை தொடர்ந்து பாதுகாக்கப்படும். ஆஸ்திரேலியர்கள் பயமின்றி தங்களின் பணியை தொடருங்கள் என வேண்டுகோள் விடுத்துள்ளார் .

சிட்னி போலீஸ் தகவல் :

செய்தியாளர்களை சந்தித்து நிலைமையை விளக்கிய சிட்னி போலீஸ் கமிஷ்னர், நாங்கள் இன்னும் பயங்கரவாதிகளை நேரடியாக தொடர்பு கொள்ளவில்லை. அவர்களை தொடர்பு கொள்ள தொடர்ந்து முயற்சித்து வருகிறோம். அவர்களின் பிடியில் எத்தனை பேர் உள்ளனர் என்பது இன்னும் தெளிவாக தெரியவில்லை. இந்த பிரச்னையை நாங்கள் அமைதியான முறையிலேயே கையாள விரும்புகிறோம். பயங்கரவாதிகளின் பிடியில் இருக்கும் பிணைகைதிகளை பாதுகாப்பாக மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது என தெரிவித்துள்ளார்.

மோடி கண்டனம்:
சிட்னியில் பயங்கரவாதிகள் பொதுமக்கள் பலரை துப்பாக்கி முனையில் பிணைக்கைதிகளாக பிடித்து வைத்துள்ள சம்பவத்திற்கு இந்திய பிரதமர் மோடி கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், துரதிருஷ்டவசமான இந்த சம்பவம் மனித இனத்திற்கு எதிரானது. மிகவும் கண்டிக்கதக்கது. அவர்கள் அனைவரும் நலமுடன் மீட்கப்பட வேண்டும் என பிரார்த்திக்கிறேன் என தெரிவித்துள்ளார்.
அவசர உதவிக்கு தொலைபேசி : இந்த சம்பவம் தொடர்பாக தகவல்களை தெரிந்து கொள்ள இந்திய தூதரகம் இலவச தொலைபேசி எண்ணை அறிவித்துள்ளது. +61481453550 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு, தற்போதைய நிலவரம் உள்ளிட்ட தகவல்களை பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.


ஒரே ஒரு பயங்கரவாதி ?

 பயங்கரவாதிகளிடம் இருந்து 5 பேர் தப்பி வந்துள்ளனர். தப்பியவர்களிடம் நடத்திய விசாரணைக்கு பின்னர், ஓட்டலுக்குள் ஒரே ஒரு பயங்கரவாதி மட்டுமே இருப்பதாக நியூசவுத்வேல்ஸ் போலீசார் சந்தேகிக்கின்றனர். அவனுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும், இந்த சம்பவத்திற்கான பின்னணி குறித்து விசாரித்து வருவதாகவும் கூறப்படுகிறது.


பெஙகளூரு: பெங்களூருவில் நாளை தாக்குதல் நடத்துவோம் என ஐ.எஸ்.ஐ.எஸ்., பயங்கரவாதிகள் டுவிட் செய்துள்ளனர். ஆஸ்திரேலியாவில் இன்று நடந்திருப்பது முதல் கட்ட ஆரம்பம் தான் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். 


சிட்னி ஓட்டலில் பயங்கரவாதிகள் பொதுமக்கள் பலரை பிணைக்கைதிகளாக வைத்துள்ளனர். போலீசார் அவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். பயங்கரவாதிகள் பிடியில் இருந்து தப்பித்து 5 பேர் வெளியே ஓடி வந்துள்ளனர். 

பிணைக்கைதியாக ஒரு இந்தியர் : பிணைக்கைதிகளில் இந்தியர் ஒருவர் இருப்பதாக கூறப்படுகிறது. இதனை மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு உறுதி செய்துள்ளார். அந்த நபர் ஐ.டி., துறையில் பணியாற்றி வருகிறார் என தெரிய வந்துள்ளது. இங்கு இருந்த கைதிகளை ஐ. எஸ். ஐ. எஸ்., பயங்கரவாத கொடியை ஏந்துங்கள் என வலியுறுத்தியுள்ளனர் .

பதிலடியாக பல கட்ட தாக்குதல்; சிட்னி சம்பவத்திற்கு பின்னர் ஐ.எஸ்.ஐ.எஸ்., பயங்கரவாதிகள் தங்களின் டுவிட்டரில் இந்தியாவை எச்சரித்துள்ளனர். சமீபத்தில் ஷமி என்ற பெயரில் டுவிட்டர் நடத்திய நபர் ஒருவரை பெங்களூரு போலீசார் கைது செய்துள்ளனர். இதற்கு பதிலடியாக பல கட்ட தாக்குதலை நடத்தவுள்ளோம். தற்போது சிட்னி ஒரு ஆரம்பம் தான். பெங்களூரு பெரும் விளைவை சந்திக்கும். இவ்வாறு எச்சரித்துள்ளனர். ஐ.எஸ்.எஸ்., ஆதரவு நபருக்கான (இஸ்லாமிக் ஸ்டேட் மீடியா ) ஒரு டுவிட்டர் கணக்கில் இத்தகவல் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் பெங்களூரு போலீசார் இதனை மறுத்துள்ளனர்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.