WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Tuesday, December 16, 2014

முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் தேர்வு: அனுமதிச் சீட்டைப் பதிவிறக்கம் செய்யலாம்

முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் போட்டித் தேர்வுக்கான தேர்வுக்கூட
அனுமதிச் சீட்டை விண்ணப்பதாரர்கள் இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்யலாம் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

ஆசிரியர் தேர்வு வாரியத்தின் www.trb.tn.nic.in என்ற இணையதளத்திலிருந்து இந்த அனுமதிச் சீட்டுகளை விண்ணப்பதாரர்கள் பதிவிறக்கம் செய்யலாம்.

விண்ணப்பங்களில் பிழைகள் இருந்தாலும், விண்ணப்பித்த அனைவருக்கும் அனுமதிச் சீட்டுகள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. விண்ணப்பத்தை ஏற்பது ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இறுதி முடிவுக்குட்பட்டது என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

தமிழகம் முழுவதும் காலியாக உள்ள 1,807 முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான அறிவிப்பாணையை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டது. இந்தப் பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு ஜனவரி 10-ஆம் தேதி நடைபெற உள்ளது.

இந்தத் தேர்வுக்கு சுமார் 2 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.


No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.