WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Saturday, December 20, 2014

மாணவர்களுக்கு என்.சி.சி., கட்டாயமில்லை: மத்திய அரசு.

புதுடில்லி: கல்வி நிறுவனங்களில், தேசிய மாணவர் படை எனப்படும் என்.சி.சி.,
மாணவர்களின் பலத்தை, 2 லட்சத்திலிருந்து, 15 லட்சமாக அதிகரிக்க, மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக, மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர், லோக்சபாவில் தெரிவித்தார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது: அதற்காக, அனைத்து மாணவர்களுக்கும், என்.சி.சி., பயிற்சி கொடுப்பது என்பது சாத்தியமில்லாத ஒன்று. இதையடுத்தே, மாணவர்களுக்கு என்.சி.சி., கட்டாயமில்லை என, அறிவிக்கப்பட்டுள்ளது. ஆயுதப்படை பிரிவுகளில், 10 முதல் 12 சதவீதம் பேர், என்.சி.சி.,யிலிருந்தே தேர்வு செய்யப்படுகின்றனர். இதை அதிகரிக்க தேவையான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. என்.சி.சி., படைப்பிரிவுகளில், 26 சதவீதம் பேர் பெண்கள். அடிப்படை வசதிகள் கிடைப்பதை பொறுத்து, எல்லையோர பகுதிகளில் உள்ள பள்ளிகளில், என்.சி.சி.,யை வரம்புக்கு உட்பட்டு கட்டாயமாக்குவது குறித்து, மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது. இவ்வாறு, பாரிக்கர் கூறினார்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.