WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Sunday, December 21, 2014

பள்ளி வன்முறைக்கு எதிராக வீதிக்கு வந்த ஆசிரியர்கள்!

'ஆசிரியர்களுக்கும், பள்ளிகளின் உடைமைக்கும் பாதுகாப்பு அளிக்கும் வகையில், தமிழக அரசு உடனடியாக சட்டத்திருத்தங்களை மேற்கொள்ளவேண்டும்' என்ற கோரிக்கையை வலியுறுத்தி, ஆசிரியர்கள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழகத்தில், நாளுக்கு நாள் பள்ளிகளில் நடக்கும் வன்முறையின் காரணமாக, ஆசிரியர்கள் பீதியில் உள்ளனர். இதனால், பள்ளியில் நடக்கும் வன்முறை சம்பவங்களுக்கு எதிராகவும், அரசின் கவனத்தை ஈர்க்கும் விதத்திலும், கோவை செஞ்சிலுவை சங்கம் முன், தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம், தமிழக தமிழாசிரியர்கள், தமிழ்நாடு முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள், ஆரம்பப்பள்ளி ஆசிரியர்கள் கூட்டணி, தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் சங்கம் உள்ளிட்ட, 18 சங்கங்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில், ஆசிரியர்கள் மற்றும் பள்ளி உடைமைகளின் பாதுகாப்பை உறுதி செய்தல், பள்ளிக்கல்வி விதிகள் திருத்தம் செய்தல், பள்ளிகளில் ஏற்படும் பிரச்னைகள் குறித்து முழுமையாக விசாரணை நடக்கும் முன்பு தலைமையாசிரியர்களை பணி இடைநீக்கம் செய்வதை தவிர்த்தல், தவறு செய்பவர்கள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை மேற்கொள்ளுதல், மாணவர்களின் தவறான பாதைக்கு காரணமான, ஆபாச வலைதளங்களை மத்திய அரசு தடை செய்தல் உள்ளிட்ட கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில், வலியுறுத்தப்பட்டன. கல்வீராம்பாளையம் அரசு பள்ளி தலைமையாசிரியர் பாலகிருஷ்ணன், ஒருங்கிணைப்பாளர் சதாசிவம் உட்பட, 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.