சென்னையில் பிப்ரவரி 13, 14 தேதிகளில் கல்வி தொடர்பான தேசிய மாநாடு
நடைபெற உள்ளது.
டான் பாஸ்கோ சீர்மிகு பள்ளி சார்பில் மாற்றத்தை விரும்பும் கல்வியாளர்களுக்காக இந்த மாநாடு நடத்தப்படுகிறது.
தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மாணவர்களுக்கு கற்பித்தல், எதிர்காலத்துக்கான பாடத்திட்டம், கல்வி உரிமைச் சட்டத்தை அமல்படுத்துவதற்கான வழிமுறைகள், அனைவரையும் உள்ளடக்கிய கல்வி ஆகியவை தொடர்பாக இந்த மாநாட்டில் விவாதிக்கப்பட உள்ளது.
இந்த மாநாட்டில், பள்ளி முதல்வர்கள், தாளாளர்கள் என 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பார்கள் என டான் பாஸ்கோ பள்ளியின் தாளாளர் ஜான் அலெக்ஸôண்டர் கூறினார்.
வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் இந்த மாநாட்டைத் தொடங்கி வைக்கிறார். காக்னிசென்ட் டெக்னாலஜி சொல்யூஷன்ஸ் நிறுவனத்தின் துணைத் தலைவர் லட்சுமி நாராயணன், சி.பி.எஸ்.இ. அமைப்பின் முன்னாள் தலைவர் தாமஸ் வி.குன்னுக்கல், வி.ஐ.டி. பல்கலைக்கழ வேந்தர் ஜி.விஸ்வநாதன், மணிபால் பல்கலைக்கழக துணைவேந்தர் கே.ராம்நாராயண், புதுதில்லியில் உள்ள ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் பொருளாதார பேராசிரியர் ஜெயதி கோஷ் உள்ளிட்டோர் இந்த மாநாட்டில் உரையாற்ற உள்ளனர்.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.