WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Wednesday, January 28, 2015

வி.ஏ.ஓ.: தேர்வானவர்களுக்கு இன்று முதல் பணியிடங்கள் ஒதுக்கீடு

கிராம நிர்வாக அலுவலர் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு மாவட்ட
வாரியாக பணியிட ஒதுக்கீட்டுக்கான உத்தரவு புதன்கிழமை முதல் வழங்கப்படுகிறது.

இதற்கான சான்றிதழ் சரிபார்ப்புப் பணிகள் செவ்வாய்க்கிழமை தொடங்கின.

இதுகுறித்து தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய வட்டாரங்கள் கூறியது:

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் கிராம நிர்வாக அலுவலர் பதவிக்கான எழுத்துத் தேர்வு கடந்த ஆண்டு ஜூன் மாதம் நடத்தப்பட்டது. அதற்கான தேர்வு முடிவுகள் கடந்த டிசம்பர் 15-இல் வெளியானது.

எழுத்துத் தேர்வில் தாற்காலிகமாக தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு, கலந்தாய்வு முறையிலான பணியிட ஒதுக்கீடு செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

மொத்தமுள்ள 2 ஆயிரத்து 234 பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கான சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டன. தொடர்ந்து, புதன்கிழமை முதல் மாவட்ட வாரியான கலந்தாய்வுகள் தொடங்குகின்றன.

பிப்ரவரி 12 வரை கலந்தாய்வு நடைபெறுகிறது. சென்னை பாரிமுனை பேருந்து நிலையம் அருகேயுள்ள தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய அலுவலக வளாகத்தில் இந்த கலந்தாய்வுகள் நடைபெறுகின்றன.

சான்றிதழ் சரிபார்ப்பு, கலந்தாய்வில் தேர்வானவர்களுக்கு மாவட்ட வாரியான பணியிட ஒதுக்கீடுகளை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தலைவர் (பொறுப்பு) சி.பாலசுப்பிரமணியன் புதன்கிழமை வழங்குகிறார். தேர்வாணைய அலுவலகத்தில் காலை 11 மணிக்கு இதற்கான நிகழ்ச்சி நடைபெற உள்ளதாக தேர்வாணைய வட்டாரங்கள் தெரிவித்தன.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.