WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Thursday, January 29, 2015

TET ஆசிரியர் தேர்வு எழுதியவர்கள் கவனத்திற்க்கு.

ஆசிரியர் தகுதி தேர்வு எழுதி தேர்ச்சியடைந்தோர் தங்கள் தேர்ச்சி
சான்றிதழைப் பெற்று கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இது குறித்து முதன்மை கல்வி அலுவலர் அலுவலக அறிக்கை: ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் 2012-13ல் நடந்த தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றோர் அதற்குரிய சான்றினை இணைய தளத்தில் பதிவிறக்கம் செய்ய அறிவுறுத்தப்பட்டது. அதை சரிவர பதிவிறக்கம் செய்யாத, 90 மற்றும் அதற்கு மேல் மதிப்பெண் பெற்றவர்களின் சான்றிதழ்கள், தேர்வு வாரியத்திடம் பெறப்பட்டு திருப்பூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அலுவலகம் மூலம் கடந்த 19ம் தேதி முதல் வழங்கப்பட்டு வருகிறது.இதைப் பெற வேண்டுவோர், போட்டோவுடன் கூடிய ஹால் டிக்கெட் மற்றும் தேர்வில் பெற்ற மதிப்பெண் விவரத்துடன், அலுவலக வேலை நாளில் வரும் 14ம் தேதிக்குள் அங்கு பெற்றுக் கொள்ளலாம்.இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.