WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Friday, January 30, 2015

அடிப்படைக் கல்வி உரிமை விழிப்புணர்வு பிரசாரத்தை மீண்டும் துவக்க அரசு உத்தரவு.

தமிழகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த, அடிப்படைக் கல்வி உரிமை
விழிப்புணர்வு பிரசாரத்தை மீண்டும் துவக்க, அரசு உத்தரவிட்டுள்ளது. ஐந்து வயது குழந்தைகளை நிபந்தனையின்றி, பள்ளிகளில் சேர்க்க வேண்டும்; மாணவர்களை உடல், மனதளவில் தொந்தரவு செய்யக் கூடாது. சமூகத்தில் நலிந்த பிரிவினர் மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கியோரின் குழந்தைகள், பள்ளி சேர்க்கையின்போது, 25 சதவீதம் இட ஒதுக்கீடு செய்ய வேண்டும் ஆகியவை உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை கொண்ட அடிப்படைக் கல்வி உரிமை சட்டம், 2009ல் அமல்படுத்தப்பட்டது. இச்சட்டம் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த, அனைவருக்கும் கல்வி இயக்கம் மூலம் பிரசாரம் செய்ய, தமிழகம் முழுவதும் கலைக் குழுக்கள் அமைக்கப்பட்டன. பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள குழுக்கள் குறித்து ஆய்வறிக்கை அனுப்ப, 32 மாவட்ட கூடுதல் முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. இதன்படி, ஒவ்வொரு மாவட்டத்திலும் முதன்மைக் கல்வி அலுவலர், கூடுதல் முதன்மைக் கல்வி அலுவலர், உதவி திட்ட அலுவலர்களால் கண்டறியப்பட்ட, பதிவு பெற்ற கலைக் குழுக்களின் பட்டியல், திட்ட இயக்குனருக்கு அனுப்பப்பட்டது. இக்குழுக்களை மீண்டும் பிரசாரத்தில் ஈடுபடுத்த, அனைவருக்கும் கல்வி இயக்க திட்ட இயக்குனர், பூஜா குல்கர்னி உத்தரவிட்டார். இதையடுத்து மாநிலம் முழுவதும், 385 ஊராட்சி ஒன்றியங்களில் பதிவு பெற்ற கலைக்குழுக்களைச் சேர்ந்த 200 பேர், அடிப்படைக் கல்வி, சட்ட விழிப்புணர்வு பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.