டெபிட் கார்டு இல்லாமலேயே ஏடிஎம் இயந்திரத்தில் பணம் எடுக்கும் வசதியை இந்த ஆண்டு இறுதிக்குள் வங்கிகள் அறிமுகம் செய்ய உள்ளன. முதல் கட்டமாக ஒரு லட்சம் ஏடிஎம்களில் இந்த வசதி கொண்டுவரப்படுகிறது. அனைத்து வங்கி கணக்குகளுக்கும் டெபிட்கார்டு வழங்கப்படுகிறது. இதன் மூலம் ஏடிஎம்களில் பணம் எடுப்பது மட்டுமின்றி, பொருட்கள் வாங்கும்போது ஆன்லைன் பரிவர்த்தனைகள் மேற்கொள்ள முடியும். அதுபோல் ஷாப்பிங் மால்கள் உள்ளிட்ட பெரிய கடைகளில் பொருட்கள் வாங்கும்போது டெபிட்கார்டு பயன்படுத்தி பணம் செலுத்தலாம். தற்போது ஏடிஎம்களில் டெபிட் கார்டு மூலமாக மட்டுமே பணம் எடுக்க முடியும்.
ஒருசில தனியார் வங்கிகள் இன்டர்நெட் மூலம் வாடிக்கையாளர் விவரங்களை பதிவு செய்யும்போது அவரது மொபைல் எண்ணுக்கு ரகசிய குறியீடு எண் அனுப்புகின்றன. இதை பயன்படுத்தி ஏடிஎம்மில் பணம் எடுக்கும் வசதியை அளிக்கின்றன. இதுபோல் எஸ்எம்எஸ் மூலமாகவும் ரகசிய குறியீடு எண் பெற்று பணம் எடுக்கலாம். தற்போது ஸ்டேட் பாங்க், பஞ்சாப் நேஷனல் வங்கி உள்ளிட்ட தேசிய வங்கிகளும் கார்டு இல்லாமல் பணம் எடுக்கும் வசதியை அறிமுகம் செய்ய உள்ளன.
இந்த ஐஎம்டி சேவை (உடனடியாக பணம் பெறுதல்) எம்பேஸ் பேமன்ட் சிஸ்டம் நிறுவனம் மூலம் அல்காடெல்-லுசன்ட் உடன் இணைந்து செயல்படுத்தப்படுகிறது.
சில வங்கிகள் ஐஎம்டி வசதியை தங்களது ஏடிஎம்களில் மட்டுமே பயன்படுத்தும் வசதியை அளிக்கின்றன. இனி இந்த வசதி உள்ள மற்ற ஏடிஎம்களிலும் பணம் பெறுவதற்கு இது சாத்தியமாக உள்ளது.
இந்த ஆண்டு இறுதிக்குள் ஒரு லட்சம் ஏடிஎம்களில் இந்த வசதி செயல்படுத்தப்படும். தவிர, வியாபார நிலையங்களிலும் கார்டு இல்லாமல் பரிவர்த்தனை மேற்கொள்ள முடியும் என்பது இதன் கூடுதல் சிறப்பு என்று இந்த திட்டத்தை வடிவமைக்கும் நிறுவன அதிகாரி தெரிவித்தார்.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.