WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Wednesday, February 25, 2015

உடற்கல்வி ஆசிரியர்கள் உடற்கல்வி இயக்குனர்களாக பதவி உயர்வு பெற புதிய வாய்ப்பு கணக்கு தேர்வில் தேர்ச்சி பெறத்தேவையில்லை

தமிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர்கள் பணிபுரிகிறார்கள். அவர்கள் உடற்கல்வி இயக்குனர்களாக பதவி உயர்வு பெறுவதற்கு இதுவரை ‘அக்கவுண்ட் டெஸ்ட் பார் சப்-ஆடினேட் ஆபிசர்’ என்ற கணக்கு தேர்வில் தேர்ச்சி பெறவேண்டும். தேர்வில் தேர்ச்சி பெறாமலேயே பதவி உயர்வு வழங்கவேண்டும் என்று உடற்கல்வி ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்தனர். இந்த கோரிக்கையை ஏற்று பள்ளி கல்வித்துறை முதன்மை செயலாளர் த.சபீதா ஒரு அரசாணை பிறப்பித்துள்ளார். அதில் கணக்கு தேர்வில் தேர்ச்சி பெறாமலேயே உடற்கல்வி ஆசிரியர்கள் உடற்கல்வி இயக்குனர்களாக பதவி உயர்வு பெறுவார்கள். இந்த அரசாணை கடந்த 2013-ம் ஆண்டு ஜனவரி 1-ந்தேதி முதல் அமலுக்கு வரும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.