WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Wednesday, February 25, 2015

PGTRB : தமிழ் வழியில் படித்த பெண்ணுக்கு ஆசிரியர் பணி வழங்க ஐகோர்ட் கிளை உத்தரவு

தேனி மாவட்டம், சின்னமனூரைச் சேர்ந்த முருகேஸ்வரி, ஐகோர்ட் மதுரை
கிளையில் தாக்கல் செய்த மனு: நான், பிஏ, எம்ஏ மற்றும் பிஎட் தமிழ் வழியில் படித்துள்ளேன். பட்டதாரி ஆசிரியர் மற்றும் உடற்கல்வி இயக்குநர் பணிக்கான 2,881 இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை 9.5.2013ல் டிஆர்பி வெளியிட்டது. இதற்கான தேர்வில் 91 கட் ஆப் மதிப்பெண் பெற்றேன். பிற்பட்டோருக்கான பிரிவில் தமிழ் வழியில் படித்த பெண்களுக்கான ஒதுக்கீட்டில் பட்டதாரி ஆசிரியர் பணி கோரினேன். ஆனால் தமிழ் வழி கல்வி ஒதுக்கீட்டிற்குரிய ஆவணங்களை தாக்கல் செய்யாததால் பணி வழங்க முடியாது என கூறிவிட்டனர். எனக்கு ஆசிரியர் பணி வழங்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது. 

இந்த மனுவை விசாரித்த நீதிபதி கே.ரவிசந்திரபாபு, ‘‘தேர்வு நடந்தது, சான்றிதழ் சரிபார்த்தது ஆகியவற்றில் டிஆர்பி தரப்பில் தேதி தவறாக குறிப்பிடப்பட்டுள்ளது. மனுதாரர் தமிழ் வழியில் படித்ததற்கான சான்று அளித்துள்ளார். தமிழ் வழியில் படிக்கவில்லை என்பதை எதை வைத்து முடிவு செய்தார்கள் எனத் தெரியவில்லை. 

இதில், எங்கோ தவறு நடந்துள்ளது. மனுதாரரின் விளக்கம் திருப்தி அளிக்கிறது. டிஆர்பி தரப்பு வாதம் ஏற்புடையதல்ல. எனவே மனுதாரருக்கு 12 வாரத்தில் பட்டதாரி ஆசிரியர் பணி வழங்க டிஆர்பி தலைவர் மற்றும் பள்ளி கல்வித்துறை இயக்குநர் ஆகியோர் நடவடிக்கை எடுக்கவேண்டும்,’’ என உத்தரவிட்டுள்ளார்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.