WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Friday, February 27, 2015

உயர்கல்வி அதிகாரிகள் பிறப்பிக்கும் உத்தரவுகள் குழப்பத்தை ஏற்படுத்துவதாக புகார்.

பிளஸ் 2 தேர்வு விடைத்தாள் மற்றும் வினாத்தாள் நோடல் மையங்களில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்புகள் குறித்து உயர்கல்வி அதிகாரிகள் பிறப்பிக்கும் உத்தரவுகள் குழப்பத்தை ஏற்படுத்துவதாக புகார் எழுந்துள்ளது.

மார்ச் 5ல் பிளஸ் 2 தேர்வு துவங்கவுள்ளது. தேர்வுகள் நடத்துவது தொடர்பாக சில நாட்களுக்கு முன் தேர்வுத் துறை ஆலோசனைக் கூட்டத்தில் மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு பல்வேறு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன. மேலும் தேர்வு மையங்கள், விடைத்தாள் மையங்கள், வினாத்தாள் மையங்களில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு முறைகள் குறித்தும் அறிவுறுத்தப்பட்டது.

இந்நிலையில் நெல்லை மேலப்பாளையம் முஸ்லிம் மேல்நிலைப் பள்ளி மையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில், விடைத்தாள்கள் எரிந்து சாம்பலாகின. இச்சம்பவத்தை அடுத்து விடைத்தாள் மையங்களில் கூடுதல் பாதுகாப்பு அளித்து அதை உறுதிசெய்ய, இணை இயக்குனர்களையும், கண்காணிப்பு பணி மேற்கொள்ள, துணை செயலர் சுபோத் குமாரையும் நியமித்து கல்வித்துறை செயலர் உத்தரவிட்டுள்ளார்.

இதன்படி, ஏற்கெனவே இருந்த பாதுகாப்பு முறையில் மாற்றம் செய்யப்பட்டு, கம்பி ஜன்னல் வசதியுள்ள மையங்களில் அதை சிமென்ட் மற்றும் செங்கலால் அடைக்கவும், மர பீரோக்கள் அல்லது தரையில் வைக்கப்பட்ட விடைத்தாள்களை ஸ்டீல் பீரோக்களில் வைக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து கல்வி அதிகாரிகள் சிலர் கூறியதாவது: தேர்வுத்துறை கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டதன் அடிப்படையில் மையங்களில் பாதுகாப்பு மேற்கொள்ளப்பட்டது. ஆனால் செயலாளர் உத்தரவு என்ற பெயரில் முந்தைய பாதுகாப்பு முறையில் மாற்றம் செய்ய வேண்டும் என இணை இயக்குனர்கள் கடைசி நேரத்தில் வலியுறுத்துவது குழப்பத்தை ஏற்படுத்துகிறது.

குறிப்பாக உதவிபெறும் பள்ளிகள், வகுப்பறைகளைத்தான் மையங்களாக பயன்படுத்த, தேர்வு காலத்தில் வழங்குகின்றன. அவர்கள் ஜன்னல்களை அடைக்க எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். இதனால் குழப்பம் ஏற்பட்டுள்ளது, என்றார்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.