தமிழ் நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் தலைவர் தியாகராஜன் கூறியதாவது: ஆசிரியர்களின் வாழ்வாதாரத்தையே கேள்விக்குறியாக்கும் புதிய பங்களிப்பு ஓய்வு ஊதிய திட்டம் ரத்து செய்யப்படும் என்று தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் இதுவரை ஆசிரியர்களின் கோரிக்கை மீது அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. 2003ம் ஆண்டுக்கு பிறகு பணியில் சேர்ந்த ஆசிரியர் அரசு ஊழிர்களுக்கு இந்த புதிய பங்களிப்பு ஓய்வு ஊதியத் திட்டம் இழப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில் பணிக்கொடை இல்லை. ஓய்வு ஊதிய ஒப்பளிப்பு இல்லை. கடன் பெறும் வசதி இல்லை.
குறைந்தபட்ச அதிகபட்ச பணிக்காலம் வரையறுக்கப்படவில்லை. மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையாக இடைநிலை, முதுநிலை பட்டதாரி, பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஊதியத்தை வழங்க வேண்டும். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் இன்று நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
அனைத்து மாவட்டத்திலும் உள்ள மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் அலுவலகங்கள் முன்பு இன்று மாலை 5 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடத்துவோம். இடைநிலை, பட்டதாரி, முதுநிலை பட்டதாரி மற்றும் அனைத்து வகை ஆசிரியர்களும் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்கின்றனர்.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.