இந்தியா - பாகிஸ்தான் உள்ளிட்ட, 14 அணிகள் பங்கேற்கும், 11வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டி, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து நாடுகளில் நடைபெற உள்ளன.
இப்போட்டிகள், வரும் 14ம் தேதி துவங்கி, மார்ச் 29ம் தேதி வரையில் நடைபெறுகிறது. இதனை நேரடியாக ஒளிபரப்ப ஈ.எஸ்.பி.என்., மற்றும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்கள், பி.சி.சி.ஐ.,யிடம் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளன. இதற்கிடையே, இப்போட்டிகளை தூர்தர்ஷனிலும் ஒளிபரப்ப அனுமதி கோரி, டில்லி ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
மனுவை விசாரித்த ஐகோர்ட், உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகளை தூர்தர்ஷன் ஒளிபரப்ப தடை விதித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து, மத்திய அரசு மற்றும் பிரசார் பாரதி சார்பில், சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்யப்பட்டது. நேற்று இந்த வழக்கு, நீதிபதிகள் ரஞ்சன் கோகய் மற்றும் பிரபுல்லா சி.பந்த் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.அப்போது, டில்லி ஐகோர்ட் தீர்ப்பை நிறுத்தி வைத்த நீதிபதிகள், உலக கோப்பை கிரிக்கெட் போட்டியை, தூர்தர்ஷன் நேரடியாக ஒளிபரப்ப அனுமதி வழங்கினர். மேலும், இது தொடர்பாக, ஸ்போர்ட்ஸ் ஸ்டார், பி.சி.சி.ஐ., உள்ளிட்டோருக்கு, 'நோட்டீஸ்' அனுப்ப உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கின் அடுத்த கட்ட விசாரணையை, வரும் 17ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர். இதையடுத்து, லட்சக்கணக்கான கிரிக்கெட் ரசிகர்கள், உலக கோப்பை போட்டியை இலவசமாக தூர்தர்ஷனில் கண்டுகளிக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. வரும், 15ம் தேதி, இந்தியா - பாகிஸ்தான் இடையிலான போட்டி நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.