”எஸ்.எஸ்.எல்.சி., தேர்வு மையங்களில், ’சிசிடிவி’ கேமரா பொருத்த
ஆலோசிக்கப்படுகிறது,” என்று, துவக்க கல்வித் துறை அமைச்சர், கிம்மனே ரத்னாகர் தெரிவித்தார்.
நிருபர்களிடம் அவர் கூறியதாவது:
எஸ்.எஸ்.எல்.சி., தேர்வு நடக்கும் மையங்களில், ’சிசிடிவி’ கேமரா பொருத்துவது உட்பட, கல்வித் துறையின் பல கோரிக்கைகளை, நாளை (இன்று) முதல்வர் தலைமையில் நடைபெறவுள்ள, பட்ஜெட் முன்னேற்பாடுகள் கூட்டத்தில் தெரிவிக்கப்படும்.
விதிமீறல்:
எஸ்.எஸ்.எல்.சி., தேர்வில் நடக்கும் விதிமீறல்களை கட்டுப்படுத்த, பெரும்பாலான நடவடிக்கை மேற்கொண்டு உள்ளோம். ‘சிசிடிவி’ பொருத்தினால், விதிமீறலுக்கு வாய்ப்பு இருக்காது என்ற நோக்கத்தில், ’சிசிடிவி’ பொருத்த ஆலோசிக்கிறோம். ஆசிரியர்கள், கிராமப்புற பள்ளிகளில், கட்டாயமாக பணியாற்றுவது தொடர்பான மசோதா, அடுத்த சட்டசபை கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்படும். இவ்வாறு, அவர் கூறினார்.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.