WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Tuesday, March 3, 2015

பிளஸ் 2 தேர்வு நடக்காத நாட்களில் பிளஸ் 1 ஆண்டுத்தேர்வு நடத்த முடிவு.

பிளஸ் 2 பொதுத்தேர்வு நாளை மறுநாள் (மார்ச் 5) துவங்கி, மார்ச் 28ல் முடிவடைகிறது.

இதற்கிடையில் மார்ச் 7,14, 21(சனி) 8, 15, 22 (ஞாயிறு) வார விடுப்பு நாட்கள் வருகிறது. மார்ச் 11, 12, 17, 19, 24, 25, 26 ஆகிய தேதிகளில் பிளஸ் 2 தேர்வுகள் இல்லை. அந்த நாட்களில் பிளஸ் 1 வகுப்புகளுக்கு முழு ஆண்டு தேர்வை நடத்த பள்ளி கல்வித்துறை முடிவு செய்துள்ளது.


இதுகுறித்து கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், "மார்ச் 11ல், பிளஸ் 1 மாணவர்களுக்கு மாவட்ட அளவில் ஒரே மாதிரியான வினாத்தாளில் தேர்வு நடத்தப்பட உள்ளது. பிளஸ் 2 தேர்வுக்கு அறை கண்காணிப்பாளராக தலைமை ஆசிரியர்கள் செல்கின்றனர். 
அவர்கள் தங்கள் பள்ளியில் பணியில் இருக்கும்போது தேர்வை நடத்தினால், கண்காணிப்பாளரை நியமிப்பதில் சிக்கல் இருக்காது. பிளஸ் 1 தேர்வுகளை மார்ச் 31 ல் முடிக்குமாறு அட்டவணை தயாரிக்கப்படுகிறது" என்றார்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.