விழுப்புரம் மாவட்டத்தில் நடக்கவுள்ள பிளஸ் 2 அரசு பொதுத் தேர்விற்கான சிறப்பு ஏற்பாடுகளை சி.இ.ஓ., மார்ஸ் தலைமையில் அதிகாரிகள் ஏற்பாடு செய்து வருகின்றனர்.
தமிழகம் முழுவதும் வரும் 5ம் தேதி பிளஸ் 2 மாணவர்களுக்கு அரசுப் பொதுத் தேர்வு நடக்கிறது. இதில் விழுப்புரம் மாவட்டத்தில் 253 பள்ளிகளைச் சேர்ந்த, 36 ஆயிரத்து 899 மாணவ, மாணவிகள் 105 மையங்களில் தேர்வு எழுத உள்ளனர்.
36,899 பேர்
மாவட்ட பள்ளிக் கல்வித் துறை சார்பில், பிளஸ் 2 அரசு பொதுத் தேர்விற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன. திண்டிவனம் கல்வி மாவட்டத்திலுள்ள, 118 பள்ளிகளில் 14 ஆயிரத்து 435 மாணவ, மாணவிகள், விழுப்புரம் கல்வி மாவட்டத்தில் 67 பள்ளிகளில் 10 ஆயிரத்து 656 மாணவர்கள் தேர்வு எழுதுகின்றனர். கள்ளக்குறிச்சி கல்வி மாவட்டத்தில் 68 பள்ளிகளில் 11 ஆயிரத்து 808 மாணவர்கள் இத்தேர்வை எழுத உள்ளனர். விழுப்புரம் மாவட்டம் முழுவதும் 253 பள்ளிகளில் 17 ஆயிரத்து 869 மாணவர்கள், 19 ஆயிரத்து 30 மாணவிகள் உட்பட 36 ஆயிரத்து, 899 மாணவர்கள் பிளஸ் 2 அரசுப் பொது தேர்வு எழுத உள்ளனர்.
தேர்வு மையம்
திண்டிவனம் கல்வி மாவட்டத்தில் 48 மையங்களும், விழுப்புரம் கல்வி மாவட்டத்தில் 24 மையங்கள், கள்ளக்குறிச்சி கல்வி மாவட்டத்தில் 33 மையங்கள் உட்பட 105 தேர்வு மையங்கள் அமைத்துள்ளனர். தனித் தேர்வர்களுக்கு 12 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
வினாத்தாள்கள்
இத்தேர்விற்கான வினாத்தாள்கள் திண்டிவனம் மாவட்ட கல்வி அலுவலகம், செஞ்சி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, திருக்கோவிலூர் பெண்கள் அரசு மேல்நிலைப் பள்ளி, விழுப்புரம் அரசு பெண்கள் மேல்நிலை பள்ளி, உளுந்தூர்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, கள்ளக்குறிச்சி பெண்கள் மேல் நிலை பள்ளி மற்றும் சங்கராபுரம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளிகளில் பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளன.
பாதுகாப்பு
பிளஸ் 2 தேர்விற்கு, மாவட்ட பொறுப்பு அதிகாரியாக அனைவருக்கும் கல்வி இயக்க திட்ட இயக்குனர் அறிவொளி நியமிக்கப்பட்டுள்ளார். இவர் தலைமையில் விழுப்புரம் சி.இ.ஓ., மார்ஸ், கூடுதல் சி.இ.ஓ., திண்டிவனம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி கல்வி மாவட்ட அலுவலர்கள், மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் மற்றும் ஜி.அரியூர் ஆசிரியர் பயிற்சி மைய முதல்வர் ஆகிய 7 பேர் தலைமையில் மண்டல பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
இவர்கள் ஒவ்வொருவர் தலைமையிலும் 4 பறக்கும் படைகள் இயங்கும். இதில் மொத்தம் 297 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். கலெக்டர் தலைமையில் டி.ஆர்.ஓ., ஆர்.டி. ஒ.,க்கள் தலைமையில் தனிக்குழுக்கள் தேர்வு மையங் களை பார்வையிட்டு, ஆய்வுசெய்ய உள்ளனர்.
அனைத்து தேர்வு மையங்களிலும் ஆயுதம் தாங்கிய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். மாணவர்கள் அச்சமின்றியும், பாதுகாப்புடனும் தேர்வு எழுதுவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் சி.இ.ஓ., மார்ஸ் மற்றும் அலுவலர்கள் செய்து வருகின்றனர்.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.