WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Tuesday, March 17, 2015

பிளஸ் 2 முக்கிய பாடத் தேர்வுகள் நாளை தொடக்கம்.

                       
பிளஸ் 2 முக்கிய பாடத் தேர்வுகள் புதன்கிழமை (மார்ச் 18) முதல் தொடங்கும் நிலையில், தேர்வுகளின் போது காப்பியடித்தால் 2 ஆண்டுகள் முதல் 5 ஆண்டுகள் வரை தேர்வு எழுத தடை விதிக்கப்படும் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் எச்சரிக்கை விடுத்துள்ளது.


முக்கியப் பாடத் தேர்வுகளை மேற்பார்வையிடும் பணியில் பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள், ஆசிரியர்களோடு, அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர்களும் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

மார்ச் 18-ஆம் தேதி கணிதப் பாடத் தேர்வும், மார்ச் 23-ஆம் தேதி வேதியியல் தேர்வும், மார்ச் 27-ஆம் தேதி இயற்பியல் தேர்வும், மார்ச் 31-ஆம் தேதி உயிரியல் தேர்வும் நடைபெற உள்ளது.

பிளஸ் 2 தேர்வு மார்ச் 5-ஆம் தேதி தொடங்கியது. மொழிப்பாட தேர்வுகள், ஆங்கிலப் பாட தேர்வுகள், கணினி அறிவியல், வணிகவியல் தேர்வுகள் நிறைவடைந்துள்ளன. இந்தப் பாடங்களில் காப்பியடித்ததாக இதுவரை 133 பேர் பிடிபட்டுள்ளனர்.

முந்தைய ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது இப்போது பிளஸ் 2 தேர்வு முறைகேடுகளில் ஈடுபடுவோரின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக அரசுத் தேர்வுகள் இயக்குநர் கே.தேவராஜன் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.